வாங்க வாத்யார்! இன்னா வரும்போதே ஒரு சந்தேகமாவே வர்றீங்க! டென்ஷன் ஆவாம நான் சொல்றதை இந்த தபாவாவது நம்புங்க வாத்யார்!
கொஞ்ச நாளா ஒரே களேபரமா கீதே நம்ம எதுனாச்சும் செய்யணும்னு நெனைக்கிறீங்களா? அப்டீன்னா சரியான எடத்துக்குதான் வந்து கீறீங்க!
நீங்க செய்ய வேண்டியதெல்லாம் இதான்:
1) புதுசா ஒரு Note Padஐ ஓப்பன் பண்ணிக்கங்க. (Note Padக்கும் நம்ம மேட்டருக்கும் இன்னா சம்பந்தம் அப்டீன்னு கேக்கக் கூடாது, ஆமாம்!). All Programs -> Accessories -> NotePad இல்லாங்காட்டி Start -> Run -> NotePad.
2) இன்னா ஓப்பன் பண்டீங்களா? இப்ப அந்த ஃபைல் குள்ளாற இதை டைப் பண்ணுங்க: Stop the bad fight
3) ஆச்சா? Copy-Paste பண்ணக் கூடாது. ஜாக்கிரதையா டைப் பண்ணுங்க. ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆச்சுன்ன்னா களேபரம் ஜாஸ்தியா பூடும், ஆமாம்!
4) இப்ப இந்த text ஃபைலுக்கு ஒரு பேர் வச்சு Desktop-ல Save பண்ணி Close பண்ணுங்க (உதாரணம்: Jaggu.txt).
5) க்ளோஸ் பண்டீங்களா? அவ்ளோதான் மேட்டர்.
...
இப்ப, Desktop-ல போய் அந்த ஃபைல double-click பண்ணி தொறந்து பாருங்க!!!
இன்னா ஆச்சு (ஏன் இப்டி ஆச்சு)ன்னு, டென்ஷன் ஆவாம பின்னூட்டததுல சொல்லுங்க வாத்யார்!
வர்ட்டா?
இப்படிக்கு
ஜாம்ப்ஜார் ஜக்கு
48806
18 comments:
அந்த சேவ் பண்ண டெக்ஸ்ட் ஃபைலையெல்லாம் ஜக்குவோட இன்பாக்ஸுக்கு அனுப்புங்கப்பா.. அந்தாளு மெயில்பாக்ஸை கமெண்டு பாக்கறதுக்குக்கூட திறக்கக்கூடாது!
I GOT 1000000000000000000000WATTS BULB.....
விண்டோஸ்லேயா வாத்யாரே? லீனக்ஸ்லே இருக்கிற நான் இன்னா பண்ணறது?
யாராச்சும் பாத்து போடுங்கப்பா!
4-3-3-5
Mine was the guess (Another 4-3-3-5, but certainly not a guess)
ராம் சுரேஷ், அனுப்பிடலாம். ஜக்குவோட மெய்ல் ஐடி கொடுங்க!
ஜக்கு வாத்யார், மெனெகெட்டு செஞ்சு பாத்தேன். இன்னா ஆச்சுன்னு சொல்லவா? க்ளிக் பண்ணேனா, பைல் தொறந்துடுச்சு. ஏன் தெரீமா? அப்டிதான் செட்டிங்க்! அட நீ ஏன் டென்சன் ஆவுறே வாத்யாரே?
瑓灯琠敨戠摡映杩瑨
How is the text vanishing????? Can anybody explain please?
அது என்ன மாயம்? எப்படி நோட்பேடில் எழுத்துக்கள் காணாமல் போகின்றன?
இன்னாங்கோ நடக்குது? விண்டோஸ் ஏளு நோட்பாடிலே பிரச்சனை இல்லீங்கோ!
ஓ ஓ...
Good One JJ
I got chinese (or) Jap !!!
瑳灯琠敨戠摡映杩瑨
How is this happening???
//I got chinese (or) Jap !!!
瑳灯琠敨戠摡映杩瑨
How is this happening???//
அட ஆமாம். எச்சூஸ்மி, என்ன நடக்குது இங்கே?
Superb!!!! But how????????
ஒன்னும் புரியல...
Nothing happenss.. mine is windows 7...
இயன்றால் http://www.tecfre.com/some-wierd-bug-in-microsoft-notepad/ சுட்டியைக் கிளிக்கி இடுகையையும் பின்னூட்டங்க்களையும் வாசியுங்கள்.
:-)
சார் நீங்க புத்திசாலி பதிவர்தான் ஒத்துக்குறேன்.
Post a Comment