புத்திசாலிகளுக்குப் புதிய புதிர்கள் (Dont Miss!)


வாத்யார், புதிர்கள் போட்டு கொஞ்ச நாளாகி விட்டது. சும்மா கட கடன்னு பதில் சொல்லுங்க பார்ப்போம்!


1) இந்த வார்த்தைகளுக்குள் இன்னா ஒற்றுமை? (நியூஸெல்லாம் படிச்சு டென்ஷன் ஆவாம பதில் சொல்லணும், ஆமா!)
  • அந்த
  • பக்தி
  • புள்ளி
  • சீ

2) இந்த வார்த்தைகளுக்கு இன்னா அர்த்தம்? (கொஞ்சம் யோசிச்சாப் புரியும்)

STANDS
0_23456789


3) இந்த வார்த்தைகளுக்குள் இன்னா ஒற்றுமை?
  • சந்தி
  • கோணம்
  • காலி
  • முனை

4) ரோமியோ இங்கே. ஜூலியட் எங்கே?


க்ளூ: இதோ ஜூலியட்!



5) கோடிட்ட இடங்களை நிரப்புக!

அ-ர -த- எ-த்-ல்-ம் ஆ- ப-வ- மு-ற்- உ-கு.


அவ்ளோதான் வாத்யார்!


வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


41425

37 comments:

நாமக்கல் சிபி said...

2. ஒன் மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்!

ஜாம்பஜார் ஜக்கு said...

நாமக்கல் சிபி வாத்யார்,

கிட்ட வந்துட்டீங்க.இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணுங்க. :-)

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

நாமக்கல் சிபி said...

அ-ர -த- எ-த்-ல்-ம் ஆ- ப-வ- மு-ற்- உ-கு.

அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு

ஜாம்பஜார் ஜக்கு said...

சிபி வாத்யார்,

அஞ்சாவது பதில் நச்!


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

Juliet is face is visible in the flower pot. Am I right?

புத்திசாலி said...

புத்திசாலிகளுக்குன்னு சொல்லிட்டீங்களே சார்! ரொம்ப யோசிச்சு யோசிச்சு கண்டுபுடிச்சுட்டேன். ஒரே வழிதான்:


இதுதான் அந்த வழி

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

இளந்தென்றல் said...

2.number one misunderstanding.

5.அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு

ஜாம்பஜார் ஜக்கு said...

இளந்தென்றல் வாத்யார்,

5வது ரொம்ப சரி. 2வது இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணுங்க. "misunderstanding" கொஞ்சம் இடிக்குற மாதிரி கீது!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

nila said...

1) nithyananda
2) one does not understands
3)---------
4)innoru photola ;)
5)க மு ல ழு தெ லா தி க ன் த றே ல

nila said...

ஏதோ எனக்கு தெரிஞ்சது

ஜாம்பஜார் ஜக்கு said...

நிலா,

வாங்க!

//nithyananda//

வரும்போதே ஏன் இந்த கொலவேறி?!! அதுக்குதான் நியூஸெல்லாம் படிச்சு டென்ஷன் ஆவாம பதில் சொல்லணும் அப்டீன்னு மேலேயே சொன்னேன். கொஞ்சம் மாத்தி யோசிங்க!

//one does not understands//
கொஞ்சம் கிராமர் இடுக்குற மாதிரி கீது. கிட்டதிட்ட வந்துட்டீங்க.


//innoru photola ;)//

சின்ன க்ளூ: இதே போட்டோல தேடுங்க!

//க மு ல ழு தெ லா தி க ன் த றே ல//

சூப்பர்!

//ஏதோ எனக்கு தெரிஞ்சது//

ஆஹா, இது வேறயா?




இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

nila said...

நான் சொன்னது கரெக்டா தப்பா????

nila said...

no one understands???

nila said...

1) புள்ளி????
ஜூலியட் மேல நிக்குறாங்களா???
மூனவதுக்கு ஒரு க்ளூ குடுங்களேன்...........

ஜாம்பஜார் ஜக்கு said...

சபாஷ் நிலா!

//no one understands?//

சூப்பர், ரொம்ப சரி!!!!

//மூனவதுக்கு ஒரு க்ளூ குடுங்களேன்...........//

மூணாவதுக்கு மூணுதான் க்ளூ!

இப்படிக்குக்கு
ஜாம்பஜார் ஜக்கு

nila said...

முச்சந்தி
முக்கோணம்
முக்காலி
மும்முனை

anbucr said...

2. Noone understands

ஜாம்பஜார் ஜக்கு said...

//முச்சந்தி
முக்கோணம்
முக்காலி
மும்முனை//

அசத்தல், நிலா!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

nila said...

மீதி ரெண்டு????
இன்னிக்கு நான் தூங்கினாப்புல தான்.... !!!!!!!!!!!!

ஜாம்பஜார் ஜக்கு said...

//இன்னிக்கு நான் தூங்கினாப்புல தான்//

மீதி ரெண்டும், ரொம்ப சுலபம் தான். தூங்கி எழுந்து யோசிங்க, கபால்னு புரிஞ்சுரும்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

nila said...

இருக்கட்டும்.... இன்னும் கொஞ்சம் யோசிச்சு [!!!!!!!!] சொல்லிட்டே போய்டுறேன்.....

வாத்தியாரையா...
முதல் கேள்விக்கும் கொஞ்சம் க்ளூ குடுங்களேன்...
இன்னிக்கு நிலாவ பென்ச்சு மேல தான் ஏறி நிக்க சொல்ல போறார் வாத்தியார்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அந்தமான் போனால் சீமான் பக்திமானாக மாறலாமோ

ஜாம்பஜார் ஜக்கு said...

//முதல் கேள்விக்கும் கொஞ்சம் க்ளூ குடுங்களேன்...//

பழனிலேர்ந்து வாத்யார் க்ளூ குடுத்துகிறார் பாருங்க!

SUREஷ், சபாஷ்!!!


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

nila said...

ஆஹா... சுரேஷ் சொல்லிட்டாரே....
அந்தமான்
புள்ளிமான்
பக்திமான்
சீமான்

மான் தான் ஒற்றுமை

SUREஷ்(பழனியிலிருந்து) said...

புத்திசாலி கொடுத்திருக்கும் க்ளூவை யாரும் பார்க்கமறுக்கிறார்களே ஏன்?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அது நிலா கொடுத்த க்ளூதான்..,

ஜாம்பஜார் ஜக்கு said...

//மான் தான் ஒற்றுமை//

நல்ல வேளை, புரிஞ்சுதே! இதுக்கு நீங்க மொதல்ல குடுத்த பதிலைப் பார்த்து படா டென்ஷனா பூட்ச்சு!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

//புத்திசாலி கொடுத்திருக்கும் க்ளூவை யாரும் பார்க்கமறுக்கிறார்களே ஏன்?//

அதான் பேஜாரா கீது! (அது சரி நீங்கதான் அந்த புத்திசாலின்னு சபைல ஒரு பேச்சு கீது, ஹி..ஹி..)


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

nila said...

//நல்ல வேளை, புரிஞ்சுதே! இதுக்கு நீங்க மொதல்ல குடுத்த பதிலைப் பார்த்து படா டென்ஷனா பூட்ச்சு!///

he he he...

Anonymous said...

ஜுலியட் எங்கே?

nila said...

answers????

nila said...

juliet enga????
vaathiyaar...... julieta kadathittingala?????
naanum daily juliet enganu solvinganu paakuren... kannulayae katamatenguringa

ஜாம்பஜார் ஜக்கு said...

//naanum daily juliet enganu solvinganu paakuren... kannulayae katamatenguringa//

ஆஹா! இன்னும் கெடைக்கிலியா? ரோமியோ "கை"ல கேட்டு பாருங்க!

இப்படிக்கு
ஜாம்ப்ஜார் ஜக்கு

nila said...

kaila theriyalayae :(

ஜாம்பஜார் ஜக்கு said...

//kaila theriyalayae :(//

நிலா, இப்ப பாருங்க! (க்ளூ/விடை மேலே)

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

nila said...

இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல??? வாத்தியார் இப்படி ரொம்ப கஷ்டமான கேள்வி எல்லாம் கேட்டா நாங்க என்ன பண்றது???
லென்ஸ் வெச்சு பார்த்தா கூட தெரியாது போல இருக்கு... நடத்துங்க நடத்துங்க

ஜாம்பஜார் ஜக்கு said...

//லென்ஸ் வெச்சு பார்த்தா கூட தெரியாது போல இருக்கு..//

லென்ஸ் எல்லாம் வாணாம்! ரோமியோ படத்துமேல ஒரு தபா க்ளிக்கிப் பாருங்க, இப்ப பளிச்சுனு தெரியும்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு