இந்த படத்தில் என்ன தவறு?


நல்லா கவனிங்க வாத்யார். இந்த படத்துல இன்னா தப்பு?




(படத்து மேல க்ளிக்கினா பெருசாத் தெரியும்!)


விடை:

நங்கூரம் பின்னால கீதுன்றது பெரிய தப்பு. மத்த மேட்டரெல்லாம் நம்ம லேட்டரல் திங்கிங்கப் பொறுத்ததுன்னு வச்சுக்கலாம். உதாரணமா, நகர்ந்தா புகை வரணும் நின்னா நங்கூரம் போடணும் அப்டீன்றது கப்பலின் தப்பு இல்ல, மாலுமியின் தப்புன்னு வச்சுக்கலாம் (இஞ்சின ஆஃப் பண்ணிட்டு நங்கூரத்த போடலை!). இல்லாங்காட்டி இஞ்சினை ஆஃப் பண்ணி கப்பல் நிக்கறதுக்கு முன்னால எடுத்த படம் இதுன்னும் வச்சுக்கலாம். கொடிமரம் மேட்டரும் அப்டித்தான். ரெண்டு இஞ்சின் இன்னா மூணு கூட இருக்கலாம்.

இதைத் தவிர லைஃப் போட் கரீட்டான எடத்துல இருக்கா? சைடுல கீழால இருக்குற ஜன்னல் அல்லாம் தண்ணிலேர்ந்து கரீட்டன உசரத்துல கீதான்னு கூட யோசிக்கலாம்! பறவைகள் பறக்குதே, கப்பல் கரையிலிருந்து எவ்ளோ தூரத்தில் கீது அப்டீன்றது இன்னொரு கோணம்!

மொத்தத்துல, லேட்டரல் திங்கிங்க்ல வாத்யார்ஸ் அல்லாம் பூந்து வெள்ளாடரது மெய்யாலுமே ரொம்ப சந்தோஷமா கீது! ஜமாய்ங்க!!!

கரீட்டா விடை சொன்ன

அகல் விளக்கு
கடைநிலை ரசிகன்
பெருசு
அனானி

அல்லாருக்கும் சபாஷ்! பல கோணத்துல யோசிச்ச ஜெய்லானிக்கும் ஒரு ஸ்பெஷல் சபாஷ்! புபட்டியன் வாத்யார், கலர் பூட்ச்சுன்றது அல்லாம் ஆனாலும் கொஞ்சம் ஓவர்!

வர்ட்டா?



இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


40116

18 comments:

அகல்விளக்கு said...

தலைவரே...

நங்கூரம் நச்சுன்னு முன்னாடிதான இருக்கும்...

பின்னாடி இருக்கு...

ஜெய்லானி said...

யோவ் கொடிமரம் இருக்கே ஏன் ?

அகல்விளக்கு said...

ஹைய்யா...

நான்தான் 50வது ஆளு.....

Anonymous said...

pugai varala

`Prabu said...

நம்ம மூளை இன்னா சொல்லுதுனா நங்கூரம் கப்பலோட முன்னாடி தான் இருக்கும். இன்னா நைனா கரீட்டா?

vasu balaji said...

புகையக் காணோமே

SUREஷ்(பழனியிலிருந்து) said...

என்ன கொடுமை சார் இது?

பெருசு said...

நங்கீரம் பின்னாடி இருக்கு

சி.வேல் said...

கொய்யால இங்கவந்ததுதான் தப்பு

ஜெய்லானி said...

1>ரெண்டு என்ஜின் இருக்கு சார் ஒன்னுதான் இருக்கனும்
2> அப்புரம் கொடிமரம் இருக்காது. 3>நங்கூரம் ஒரு பக்கம்தான் இருக்கு
4>கிரேன் இல்லை
5>போவதாக இருந்தால் புகை வரும்
6>நிற்பதாக இருந்தால் நங்கூரம் இட்டிருக்கும்

Anonymous said...

//நங்கூரம் நச்சுன்னு முன்னாடிதான இருக்கும்...//

Repeatey..!

gopi said...

பெர்முடா ட்ரையங்கல் ரகசியம் போல வெளங்கல நீனெ சொல்லு வாத்யார் !!

PPattian said...

கப்பல் பாடியில நடுவில கொஞ்சம் கலர் போயிருச்சி.. டைட்டானிக் சும்மா கரு கருன்னு இல்ல இருக்கும்..

ஜாம்பஜார் ஜக்கு said...

நங்கூரம் பின்னால கீதுன்றது பெரிய தப்பு. மத்த மேட்டரெல்லாம் நம்ம லேட்டரல் திங்கிங்கப் பொறுத்ததுன்னு வச்சுக்கலாம்.

மத்த விவரங்கள் மேலே!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

//லைஃப் போட் கரீட்டான எடத்துல இருக்கா//

I also thought of it! Why are they so high?

Unknown said...

எனக்கு சைக்கிள் பத்திதான் தெரியும்.

சாமக்கோடங்கி said...

முடியல... நான் லேட்டு..

Anonymous said...

முகில் கபலோடையே இருக்கிறது தானா?