
மதியம் வெள்ளி, டிசம்பர் 11, 2009
மதியம் செவ்வாய், டிசம்பர் 8, 2009
யார் இந்த ஜாம்பஜார் ஜக்கு? (100வது பதிவு!)
"சும்மா ரீல் வுடாத நைனா!
ஒன் எழுத்து பார்த்தா தெரியலையா நீ பழைய ஆளு தான்னு!"
இப்பவும் அப்டிதான் சொல்றாரான்னு அவுரத்தான் கேக்கணும்! அது இருக்கட்டும். அடிக்கடி யாரு இந்த ஜாம்பஜார் ஜக்குன்னு ஒரு கேள்வி வந்துகினே இருக்கு. அதுக்கு இந்த நூறாவது பதிவுலயாவது பதில் சொல்லிடுன்னு அண்ணாத்த கண்டிஷனா சொல்லிட்டாரு. வேற வழி இல்ல சொல்லித்தான் ஆகணும்.
சரி, யார் இந்த ஜாம்பஜார் ஜக்கு?
எனக்குத் தெரிஞ்சு மொத்தம் மூணு ஜாம்பஜார் ஜக்கு கீறாங்க.
ஜாம்பஜார் ஜக்கு-1:
நம்ம மனோரம ஆச்சி ஆக்ட் குடுத்த "பொம்மலாட்டம்" அப்டீன்ற படத்துல "வா வாத்யாரே வூட்டண்ட"ன்னு நம்ம பதிவோட டைட்டில் சாங்க் வரும். வி.குமார் மீசிக்ல அசத்தலா மனோரமா ஆச்சி சொந்த குரல்ல பாடி இருப்பாங்க. அதுல நம்ம சோ வாத்யார் ஜாம்பஜார் ஜக்குன்ற பேரோட வருவாரு. அத்த பத்தின நம்ம புதிர் இங்க.
ஜாம்பஜார் ஜக்கு-2:
ஆச்சா? அடுத்தாப்ல, விவேகா ஃபைன ஆர்ட்ஸின் ஆரம்ப காலத்துல "மெட்ராஸ் பை நைட்" அப்டீன்னு ஒரு டிராமா. சூஸைட் பண்ணிக்க போற ஒரு காலேஜ் ஸ்டூடண்ட் ஒரு ராத்திரில மெட்ராஸ்ல சந்திக்குற அனுபவங்கள பத்தின கதை. அதுல மறுபடியும் நம்ம சோ வாத்யார் ஜாம்பஜார் ஜக்குன்ற பேர்ல போலிஸ் கான்ஸ்டபிளா வந்து தூள் கிளப்புவாரு. அதுவும், அந்த காலேஜ் ஸ்டூடன்ட் மெரினா பீச்சுல தற்கொலை பண்ணிக்க ட்ரை பண்ணி ஜக்கு கிட்ட மாட்டிகிற சீன் இப்டி போவும்:
காலேஜ் ஸ்டூடன்ட்: தற்கொலை பண்ணிக்கிட்டா என்ன தப்பு? என் உயிரை நான் எடுத்துக்க எனக்கு உரிமை கிடையாதா?
கான்ஸ்டபிள் ஜக்கு: இப்போ, உனக்கு ஒரு புள்ளை கீறான்னு வச்சுக்க. அவனோட உயிர எடுக்குறதுக்கு உனக்கு ரைட்ஸ் கீதா?
காலேஜ் ஸ்டூடன்ட்: ஐயோ! அது எப்படி? எனக்கு உரிமை கண்டிப்பா கிடையாது.
கான்ஸ்டபிள் ஜக்கு: அப்டி வா வாத்யார். நீ பெத்த புள்ள உயிர எடுக்கவே உனக்கு உரிமை கெடையாதே, உங்க அப்பன் பெத்த புள்ள நீ, உன் உயிர எடுக்க உனக்கு எப்டி உரிமை இருக்கும்? என் கிட்ட லா பாயின்ட் பேசாத, நட ஸ்டேஷன்னுக்கு!
ஜாம்பஜார் ஜக்கு-3:
அதுவும் சரி. மூணாவதா ஒரு ஜாம்பஜார் ஜக்கு கீறாரு. பதிவெல்லாம் எளுதி அல்லாரையும் டென்ஷன் பண்ணிகினு கீறாரு. அவுரு யாருன்னு தெரியுமா? இன்னாது? தெரியாதா?
அட, இன்னாங்க இப்டி சொல்லிட்டீங்க?
அவுரு யாருன்னு தெரிஞ்சுகணும்னா டென்ஷன் ஆவாம அப்டியே கீள வாங்க...
...
...
...
...
...
...
அந்த ஜாம்பஜார் ஜக்கு யாருன்னா...
...
...
...
...
...
...
அட, நான் தான் வாத்யார்!
வர்ட்டா...
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
பி.கு.: அல்லாருக்கும் ஜக்குவின் நன்றிகள். தொடர்ந்து அடிக்கடி வூட்டாண்ட வாங்க வாத்யார்!
Labels:
ஆராய்ச்சி
மதியம் வெள்ளி, டிசம்பர் 4, 2009
புத்திசாலிகளுக்கு ஒரு தமிழ்ப் புதிர்! (Dont Miss!)
வாத்யார் இந்த வார்த்தை வெளையாட்டெல்லாம் இங்கிலீஷ்ல ஆடி இருப்பீங்க. ஒரு தபா தமிழ்ல ஆடிப் பாருங்க அப்டியே ஆ...டி பூடுவீங்க!
க்ளூ எல்லாம் எதுவும் கிடையாது, சும்மா அசத்துங்க!
இதெல்லாம் இன்னா?
1) கஈரம்ல்
2) துண்டு வெட்டு துண்டு
3) காமழைடு
4) காவிரிகாவிரிகாவிரிகாவிரிகாவிரிகாவிரி
5) காஞ்சீபுரம்
படிப்பு
6)
7) ர்பா
8) சி1த்3த5ப்7பா
9) ட்டு, ட்டு
10) 120 செ.மீ யார்
விடைகள்:
1. கல்லுக்குள் ஈரம்
2. வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு
3. காட்டுல மழை
4. காவிரி ஆறு
5. சின்ன காஞ்சீபுரம்
6. மேல் படிப்பு
7. திரும்பிப்பார்
8. ஒண்ணு விட்ட சித்தப்பா
9. இருட்டு
2. வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு
3. காட்டுல மழை
4. காவிரி ஆறு
5. சின்ன காஞ்சீபுரம்
6. மேல் படிப்பு
7. திரும்பிப்பார்
8. ஒண்ணு விட்ட சித்தப்பா
9. இருட்டு
10. நாலடியார்
தமிழ் புதிரை அசத்தலா ஆடின எல்லாருக்கும் ஸ்பெஷல் நன்றி. எல்லா கேள்விகளும் ஒரிஜினல் ஜாம்பஜார் கேள்விகள். அதுனால கூகுள்ல தேடினாலும் விடை கிடைக்காது. இருந்தாலும் எல்லா கேள்விக்கும் பளிச்சுனு மின்னல் வேகத்துல பதில் சொன்ன பினாத்தல் சுரேஷ் வாத்யாருக்கு எல்லாரும் ஜோரா ஒரு தபா கைத்தட்டிடுங்க!
வர்ட்டா?
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
Labels:
விளையாட்டு/புதிர்
Subscribe to:
Posts (Atom)