ஜாலியாக சில பழைய புதிர்கள் (Dont Miss!!!)



இன்னா வாத்யார் ரெடியா? சில புதிர்கள் எங்கியோ கேட்ட மாதிரி இருக்கும். பார்க்கலாம் எவ்ளோ கரீட்டா சொல்றீங்கன்னு!

ஜூட்!



1) மொதல்ல ஒரு சின்ன வார்ம் அப்! மேலே படத்துல எத்தினி பேர் கீறாங்க?

2) ஒரு பெட்டியில் பத்து கறுப்பு சாக்ஸ், பத்து வெள்ளை சாக்ஸ் இருக்குன்னு வச்சுகுங்க. கண்ணை மூடிக்கினு கொறஞ்ச பட்சம் எத்தினி சாக்சை எடுத்தா ஒரு ஜோடி ஒரே கலர் சாக்ஸ் கெடைக்கும்?

3) அடுத்த நம்பர் இன்னா வர வேண்டும்?

1
11
21
1211
111221
312211
13112221


4) பத்து கிலோ இரும்பு, ஐந்து கிலோ பஞ்சு இது இரெண்டையும் எல் ஐ சி பில்டிங் மாடியிலிருந்து கீழே போட்டால் எது முதலில் மௌன்ட் ரோடில் விழும்?


5) நீங்கள் ஒரு குதிரை மேல் மிக வேகமாக போய் கினு கீறீங்க. வலது பக்கம் ரொம்ப பள்ளம். இடது பக்கம் ஒரு யானை அதே வேகத்தில் கூடவே வந்துகினு கீது. உங்களுக்கு முன்னால் ஒரு புலி உங்கள் வேகத்திலேயே போய்க்கினு கீது. பின்னாலயே ஒரு சிங்கம்! இந்த ஆபத்தான கட்டதிலிருந்து எப்டி தப்பிச்சு வருவீங்க?


6) உங்க கிட்ட 8 தங்க கட்டிகள் கீது (சும்மா ஒரு பேச்சுக்குதான்!). அதுல ஒரு கட்டி மட்டும் கொஞ்சம் வெய்ட் ஜாஸ்தி. ஒரு தராசுல ஒரே ஒரு தபா வெய்ட் போட்டு எந்த தங்க கட்டி வெய்ட் ஜாஸ்தின்னு கண்டு புடிக்கணும். முடியுமா?


7) இதுல இன்னா விசேஷம்? 8, 5, 4, 9, 1, 7, 6, 10, 3, 2, 0


அவ்ளோதான் மேட்டர்.


வர்ட்டா?



இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


54325



22 comments:

மாயவரத்தான் said...

1. 9
2. 3
3. 1111332221
4. ரெண்டுமே எல்.ஐ.சி. பில்டிங் காம்பவுண்டுக்குள்ள தான் விழும். (காம்பவுண்டு இருக்கு தானே?!)
5. எல்லாம் ஒரே ஸ்பீடுல தானே ஓடிட்டிருக்கு. எதுக்கு ஆபத்து?!

ஜாம்பஜார் ஜக்கு said...

மாயவரத்தான் வாத்யார்,

1,2 சரி. 3-சரி இல்லை 4-கேள்விய இன்னொரு தபா பாருங்க. 5-அதுக்குன்னு வாழ்க்கை முழுதும் ஓட முடியுமா? யோசிங்க!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

திவாண்ணா said...

1. 9 கவுண்ட் பண்ணிகீறேன் வாத்யாரே!
2. 11. த மாதிரி க்லௌஸ் கேக்க தாவல?
3. 1113213211
4. இரும்புதான் வாத்யார்! பஞ்சு பறந்து பூடும்பா. அது ஸ்லோவாதான் எறங்கும்.
5. alt+ F4 கேம் ஐ நிறுத்திட்டா போதும் வாத்யார்!
6. முடியாது!
7. 0 லேந்து 10 வர அல்லா நம்பரும் கீது!
அவ்வ்ளோதான் மேட்டர். வர்ட்டா?

இளந்தென்றல் said...

1. 9
2. 3
3. 1113213211
4. ore nerathil vizhum
5.yosiththukondu irukkiren. viraivil kooruven
6. mudiyadhu
7. numberf from zero to ten in alphabetical order

ஜாம்பஜார் ஜக்கு said...

திவா வாத்யார்,

1-சரி 2-கொஞ்சம் ஓவர் 3-சரி 4-சரியில்லை 5-கொஞ்சம் மாத்தி யோசிங்க 6-அப்டீன்றீங்க? அப்டீன்னா சரிதான்! 7-அதான் தெரிஞ்ச மேட்டர் ஆச்சே! இன்னா ஸ்பெஷல்?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

இளந்தென்றல் வாத்யார்!

சபாஷ்! 1,2,3,4,6,7 அல்லாம் கரீட்டு. Bulls eye! 5ஐ மட்டும் ரோசிங்க!


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

பாலராஜன்கீதா said...

5. ரங்க ராட்டினம்
:-)

ஜாம்பஜார் ஜக்கு said...

பாலராஜன்கீதா வாத்யார்,

5- ரொம்ப சரி :-)


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Zero to Infinity said...

1 - nine human beings & one bike
2 - 0.1111
3 - 4113112221 (think I am missing few logics)
4 - If you throw both item in same time iron will reach first
If you throw cotton first and iron after time delay...cotton will reach first
If you throw cotton toward mount road and iron toward other side then cotton will reach mount road
5 - Just jump out of horse,
Tiger may not aware of that
Elephat will run with the horse
Hope lion is far away from the chase (u didn't said the distance)
6 - Hooo easy keep 4 pcs of gold in each side of balance
Sure one side will be down because of exess weight
remove one-one gold from each side
the lower side will come up once u remove the heavier gold
7 - eight...five..four...nine..one..seven..six..ten..three..two..zero (alphabetical order..?)

பாலராஜன்கீதா said...

6. ஒரே ஒரு தபான்னா முடியாது.
( 2 தபான்னாதான் முடியும்)
7. ஆங்கிலத்தில் அந்த எண்களின் அகரவரிசை.
4. இரண்டும் ஒரே நேரத்தில்தான் கீழே விழும்னார் ஐசக் நியூட்டன்.
2, 11
மீதிஅல்லாம் அப்பாலிக்கா.

ஜாம்பஜார் ஜக்கு said...

ZERO வாத்யார்,

1 & 7 மட்டும்தான் கரீட்டு!

2- சாக்ஸை கத்திரிக்கோலால வெட்டல்லாம் கூடாது, ஆமாம்.
3- ஒரு கதை மாதிரி யோசிங்க
4- இது ஒரு நேரான ஃபிஸிக்ஸ்!
5- அது எப்படி புலிக்கு தெரியாமல் போகும்? கொஞ்சம் லேட்டரலா யோசிங்க!
6- ஆக மொத்தம் எத்தினி தபா வெய்ட் போட்டீங்க?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

பாலராஜன்கீதா said...

ஜாம்பஜார் ஜக்கு

54325

???

இனியா said...

1. 9 per

4. rendum ore nerathilathaan keezha varum vaathyare

5. appadiye pinnadi thiruppi poga vendiyathuthaan vaathyare!

8. alphabetical order :)

ஜாம்பஜார் ஜக்கு said...

பாலராஜன்கீதா வாத்யார்,

அல்லாம் - சொன்ன வரீக்கும் - கரீட்டு.
54325 - இது புதிர் இல்லை, நீங்களே கண்டு புடிக்கலாம் ;=)


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

இனியா வாத்யார்,

1,4,8 கரீட்டு.
புலி சிங்கத்துக்கு திரும்பத் தெரியாதா?!!


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Tamilish Team said...

Tamilish Support to me
show details 12:49 AM (0 minutes ago)

Hi jambajarjaggu,

Congrats!

Your story titled 'ஜாலியாக சில பழைய புதிர்கள் (Dont Miss!!!)' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 3rd August 2010 09:49:01 PM GMT



Here is the link to the story: http://ta.indli.com/story/313882

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

இமெயிலில் வந்தது.

தாங்க்ஸ் டமிலிஷ் வாத்யார்ஸ்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

பாலராஜன்கீதா said...

//54325 - இது புதிர் இல்லை, நீங்களே கண்டு புடிக்கலாம் ;=)//
அந்த நம்பருக்கும் free web counterக்கும் என்ன கனக்ஷன் ?

திவாண்ணா said...

திவா வாத்யார்,

2-கொஞ்சம் ஓவர்
ரொம்பவே ஓவர். சரியா யோசிக்கலை.

4-சரியில்லை
ஏன் வாதயார்?
பஞ்சு மூட்டை இரும்பைவிட வால்யூம் ரொம்பவே அதிகம். அதனால உராய்வு அதிகம். அதனால் லேட்டாத்தான் எறங்கும்.

5-கொஞ்சம் மாத்தி யோசிங்க

ஹிஹிஹி! நல்ல புதிர்.

6-அப்டீன்றீங்க? அப்டீன்னா சரிதான்!
:-))

7-அதான் தெரிஞ்ச மேட்டர் ஆச்சே! இன்னா ஸ்பெஷல்?
ம்ம்ம். இதுவும் வுட்டுட்டேன். நன்றி இளந்தென்றல்!

நினைவாலே said...

1.9

2.3
3.1113213211

4.இரும்பு

5.ராட்டினம் நின்றபின் குதிரையீல் இருந்து இறந்கி வருவேன்.

6.முடியும்

7. ௦0 இருந்து 10 வரை எல்லா இலக்ங்களும் குழம்பி இருகின்றன

நினைவாலே said...

1.9

2.3
3.1113213211

4.இரும்பு

5.ராட்டினம் நின்றபின் குதிரையீல் இருந்து இறந்கி வருவேன்.

6.முடியும்

7. ௦0 இருந்து 10 வரை எல்லா இலக்ங்களும் குழம்பி இருகின்றன

nila said...

5. எனக்கென்னமோ ரங்கா ராட்டினம் ஞாபகம் வருது

nila said...

5. எனக்கென்னமோ ரங்கா ராட்டினம் ஞாபகம் வருது