இரவு நேரம். தூரத்தில் எங்கோ மணி பதினொன்று அடித்து ஓய்ந்தது. கல்யாணமாகி இன்றோடு இருபது வருஷம் ஆகிவிட்டது. அவள் கண்களை மூடியபடி படுக்கையில் புரண்டு படுத்தாள்.
திடீரென்று அவளுடைய கணவனின் கை அவளுடைய கழுத்தின் பின்புறம் மெதுவாகத் தடவியது. என்ன ஆச்சரியம்! இருந்தாலும் அவள் கண்களைத் திறக்கவில்லை! அவனுடைய கை கழுத்திலிருந்து இப்போது அவளுடைய முதுகை நோக்கி மெல்ல நகர்ந்தது. அவனுடைய மூச்சுக் காற்றை சுலபத்தில் கேட்க முடிந்தது. அவள் பிடிவாதமாக கண்களை மூடியபடி கவனித்தாள்.
அவனுடைய கை இப்போது முதுகைத் தாண்டி அவளுடைய இடுப்பை நெருங்கிவிட்டது. அவளுடைய இதயம் சிலிர்த்தது. இருந்தாலும் கண்ணைத் திறக்கவில்லை. அவனுடைய கையின் பயணம் இன்னும் நிற்கவில்லை. இடுப்பையும் தாண்டி அவளுடைய முழங்கால்களுக்குக் கீழே ஒரு கணம் தயங்கியது. அடுத்த கணம் அவளுடைய பாதங்களுக்கு அடியில் சட்டென்று நகர்ந்தது.
மூடிய இமைகளுக்குள் அவளுடைய கண்கள் பட படத்தன.
அந்த நொடியில் திடீரென்று டிவி உயிர் பெற்றது. "உலகத் தொலைக் காட்சிகளில் முதல் முதலாக...!"
"என்னாங்க... என்ன ஆச்சு?"
...
...
...
...
...
...
...
...
"டிவி ரிமோட் கெடச்சுடுச்சு!"
வர்ட்டா?
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
39096
15 comments:
ஹெக்ஹே......
டாப்பு மாமு..
கிர்ர்ர்ர்ர்ர்ர்
தெரியுமே.
எப்பிடிங்க தலைவா இப்பிடி வித விதமா யோசிக்கிறீங்க?
அருண்
//இரவு நேரம். தூரத்தில் எங்கோ மணி பதினொன்று அடித்து ஓய்ந்தது. கல்யாணமாகி இன்றோடு இருபது வருஷம் ஆகிவிட்டது.\\
ஆனாலும் பதினொரு மணிக்கெல்லாம் டீவி பாத்தாக்க என்னத்தச் சொல்ல.
அன்புடன்
சந்துரு
சார் நீ ஆரம்பிக்கும் போதே தெரிஞ்சு போச்சு. ஆனா இந்த ரிமோட் மேட்டர் எதிர்பார்கல?
(ஏம்பா சொந்தமா யோசிகிரின்களா இல்ல ஆல் வச்சு இருகிங்களா )
சூப்பர்!!!
//டிவி ரிமோட் கெடச்சுடுச்சு//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஆஹா, ரெண்டு நாள் ஊர்ல இல்லேன்னா போட்டு தாக்கிடுவீங்களே! நல்ல கதை ஹி..ஹி :)))
ரவி
இதானா.....:)
"ஒரு கிளு கிளு காதல் கதை (கண்டிப்பாக 18+)!"....THALIVA..THAT AND ALL OLD FASHION...."ஒரு கிளு கிளு காதல் VIDEO(U)!"...THIS IS THE LATEST TREND....
WE ARE EXPECTING MORE PUZZLE ARTICLES....SO THAT WE WILL DEVELOP MULTI DIMENSIONAL THINKING......
யோவ் Zero to Infinity...
எங்க வந்து என்ன பேச்சு பேசுற..
மல்டி டைமன்சனல் திங்கிங்...?
இங்க வெறும் பல்டி டைமன்சனல் மட்டும் தான்..
அதாவது தலை கீழா யோசிக்கணும்...
நீ இப்டி சொல்றது எங்க தலைய கெட்ட வார்த்தைல திட்ற மாறி கீது..
வர்ட்டா...
ஹி ஹி..
சூப்பர்!
Post a Comment