இருட்டான கார் பார்க்கில் தனியாக அவனும் அவளும்! (18+ கதை)


வாத்யார், கதைய படிச்சுட்டு சந்தேகமெல்லாம் கேக்கக் கூடாது, சொல்லிட்டேன் ஆமாம்!

***


ஏட்டு ஏகாம்பரத்த்துக்கு கேஸ் கிடைச்சு ரொம்ப நாள் ஆகிவிட்டது. இன்ஸ்பெக்ட்டர் வேற ஒரு மாதிரி முறைக்கிறார். இன்னிக்கு சரியா ஒரு கேஸை புடிக்காமல் திரும்பக் கூடாது.

அட, அந்த இருட்டான கார் பார்க்கில் ஒரு கார் தனியா நிக்குதே. இந்த ஏரியா வேற ஒரு மாதிரியான இடம். காருக்குள்ள லைட் எரியுதே? உள்ளே யாரு?

இன்னாது? ஒரு பையனும் ஒரு பெண்ணுமா? இன்னிக்கு சரியான கேஸு ஒண்ணும் மாட்டும் போல இருக்கே.

ஏகாம்பரம் காரை நெருங்கினான்.

அட, இது என்ன ஆச்சரியம். அந்த பையன் முன் சீட்டுல உட்கார்ந்து ஏதோ புக்கை படிச்சுகினு இருக்கிறான். அந்த பெண் பின் சீட்டில் நூல் கண்டோடு உட்கார்ந்துகினு இருக்கு. இது இன்னா மேட்டரு? ஒண்ணும் புரியலயே?

ஏகாம்பரம் லட்டியால் கார்க் கதவைத் தட்டினான்.

ஏய்! இன்னா பண்ற இங்க?

குட் ஈவினிங் சார்! பார்த்தா தெரியலயா சார், புக் படிச்சு கிட்டு இருக்கேன்.

அந்த பொண்ணு இன்னா பண்ணுது?

இருங்க பார்த்து சொல்றேன். ஐ திங்க் ஸ்வெட்டர் பின்னுதுன்னு நெனைக்கிறேன்.

உனக்கு இன்னா வயசாவுது?

25 வயசு ஆவுது சார்.

அந்த பொண்ணுக்கு இன்னா வயசு ஆவுது? ... ஏய்! இன்னா வயசைக் கேட்டா வாட்சைப் பாக்குற?

...

...

...

...

...

...

...


இன்னும் இருவது நிமிஷத்துல 18 வயசு ஆகும் சார்.


இந்த நேரத்துல இங்க இன்னா பண்றீங்க? கார்ல பெட்ரோல் தீந்து போயிடுச்சு சார். டிரைவர் பெட்ரோல் வாங்க போயிருக்காரு. இப்ப வந்துடுவாரு சார்!


இதுக்குதான் முன்னாலயே சொன்னேன். கதைய பட்ச்சுட்டு சந்தேகமெல்லாக் கேக்கக் கூடாதுன்னு. (இன்னும் புரியலன்னா ஒரு தபா Ctrl-A வை அமுக்கிப் பாத்துருங்க!)


வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு37895

11 comments:

ஏகாம்பரம் said...

ஹா..ஹா..ஹா... இது குறும்பு !!!

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//இன்னும் புரியலன்னா ஒரு தபா Ctrl-A வை அமுக்கிப் பாத்துருங்க!)

//

இப்பவும் புரியல

Anonymous said...

Ctrl-A எல்லாம் அமுக்காமலேயே நல்லா இருக்கு... ஹி..ஹி...

Zero to Infinity said...

"இருட்டான கார் பார்க்கில் தனியாக அவனும் அவளும்! (18+ கதை)

If there are two people how come "தனியாக"...it should be "இருட்டான கார் பார்க்கில் அவனும் அவளும்! (18+ கதை)

18+ illa.....18 - 20 mins

APPAAAAAAAAAAAAAA.....

During childhood days, when I saw..Jaki's film...I used to think..one day I want to be like him....IT NEVER HAPPENED.

During childhood days, when I saw..P C SARKAR'S magic show...I used to think..one day I want to be like him....IT NEVER HAPPENED.

During childhood days, when I saw..MADAN'S cartoon...I used to think..one day I want to be like him....IT NEVER HAPPENED.

During childhood days, when I saw..Irai Anbu IAS...I used to think..one day I want to be like him....IT NEVER HAPPENED.
.
.
.
.
.
.
.
.
.
.
When I started to read your blog...I thought...
.
.
.
.
.very shortly I will become
.
.
..
.
.
.
.
.
MAD....OMG...it started to happen

DREAMER said...

பெட்ரோலக்காட்டி தண்ணி ஊத்திட்டியே தலைவா...

நல்ல பில்டப்...

அன்புடன்
ஹரீஷ் நாராயண்

ManA © said...

ஷப்பா.. என்னமா think பண்றாங்க,, முடியல,,

Tamilish Team said...

Hi jambajarjaggu,

Congrats!

Your story titled 'இருட்டான கார் பார்க்கில் தனியாக அவனும் அவளும்! (18+ கதை)' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 20th February 2010 01:56:01 PM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/189125

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

இமெயிலில் வந்தது

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

மங்குனி அமைச்சர் said...

நல்லா இருக்கு சார்

ஏம்பா யாருமே ஏட்டு ஏகாம்பரத்த்துக்கு ஒரு பாராட்டு சொல்ல மாடிங்களா, அவரு இல்லாட்டி இந்த கார பத்தி எப்படி நமக்கு தெரியும்? நன்றி எட்டு ஏகாம்பரம் சார் (இந்த பசங்க எல்லாம் நன்றியே இல்லாதவனுக. நீங்க தப்பா எடுத்துகாதிங்க )

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//Zero to Infinity //

இவன் தொல்ல தாங்க முடியல....

மாப்பு.. இந்த வேலையையாச்சும் உறுப்படியா செய்யு..

நன்றி..