டார்லிங்!
என்னாங்க, நான் கிச்சன்ல இருக்கேன்!
கிச்சன்ல என்ன பண்ணிட்டு இருக்கே?
தோசை பண்ணிட்டு இருகேங்க!
தோசையா? ஜாக்கிரதை! ஜாக்கிரதை! இன்னும் கொஞ்சம் எண்ணை விடு!
சீக்கிரம்! சீ...கிரம்! பாத்து....பாத்து....
கையை சுட்டுக்கப் போற... ஜாக்கிரதை.... இவ்ளோ எண்ணையா விடுவாங்க...
பாத்து.... கீழ எல்லாம் சிந்துது பாரு.. சீக்கிரம்... சீக்கிரம்... திருப்பு... திருப்பு....
தோசையை திருப்பு..... கறுப்பாயிடும்...
பாரு பாரு இன்னும் கொஞ்சம் எண்ணை வேணும்...
சீக்கிரம்.... தோசை பண்ணும் போது நான் சொன்னதை என்னிக்குதான் கேட்டு இருக்கே?
பயமா இருக்கு...
இன்னிக்கு கல்லுல தான் ஒட்டிக்க போவுது....
ஜாக்கிரதை....சீக்கிரம்... உப்பு...உப்பு...
எங்க வச்சு இருக்கே? உப்பு போட்டியா இல்லியா?
எங்க வேடிக்கை பாக்குறே? தோசை பண்ணும் போது அடுப்ப நேரப் பாத்து பண்ணனும்....
கையை சுட்டுக்கப் போறே....
பாத்து... பாத்து....
ஜாக்கிரதை...
சீக்கிரம்.. சீக்கிரம்...சீக்கிரம்...
திருப்பு.. திருப்பு....
என்னாங்க ஆச்சு உங்களுக்கு? கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம் ஆச்சு. எனக்கு ஒரு தோசை பண்ணத் தெரியாதா?
...
...
...
ஹி.. ஹி... நான் கார் ஓட்டும் போது நீ பண்றது எனக்கு எப்டி இருக்கும்னு இப்ப புரியுது இல்ல?
வர்ட்டா?
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
35770
8 comments:
எப்படிங்க இப்படி யோசிக்கிறீங்க? அடடா.. ..
சூப்பர் ஐடியா அண்ணாச்சி..,
இந்த வழி நல்லாயிருக்கு..,
அட..
ஹா ஹா ஹா !சின்ன புள்ளதனமால்ல இருக்கு?
தலைவரே உங்க அளவுக்கு யோசிக்க முடியாது.
இன்னிக்கே இந்த ஐடியாவை யூஸ் பண்ணிட வேண்டியது தான்!
:-)))))))))))
அனானி
(பேரச் சொன்னா மனைவிகிட்ட மாட்டிப்பமில்ல!!!)
அருமை..நான் என் மனைவியைக் கூப்பிட்டு சப்தமாகப் படித்தும் காட்டினேன்..அதற்கு அவள், "ஆமா, ஒரு பொம்பளக்கி தோசகூடச் சுடத் தெரியாதா? அவரு ஏன் இப்புடி பேசுறாரு?" என்று என்னிடம் திருப்பிக் கேட்டாள்! நான் என்ன பதில் சொல்ல?!!!!!!!!!!
வாயில தோசையுடன்
நாகூர் ரூமி
எப்புடிங்க!
Post a Comment