வாத்யார், தமிழ்மணம் CLASSIC எங்கே?
தமிழ்மணத்தில் ஒரு BUG?
இதுல இன்னா பொடி இருக்குதோன்னு டென்ஷன் ஆவாதீங்க தலீவா! மெய்யாலுமே தமிழ்மணத்துல ஒரு bug இருக்கிற மாதிரி கீது!
தமிழ்மணத்துக்கு மறுபடியும் அதே கேள்வி!
ஒரு வருஷத்துக்கு முன்னால இப்டி ஒரு பதிவு போட்டு இருந்தேன். இன்னிக்கும் நம்ம கேள்வி அப்டியேதான் கீது.
- புது பதிவு போட்டிங்கன்னா தமிழ்மணத்துல வர்றதுக்கு முன்னால தமிழ்மணம் க்ளாஸிக்ல பளிச்சுன்னு வந்துடுதே அது ஏன்?
- பின்னூட்டம் ரிலீஸ் பண்ணீங்கன்னா க்ளசிக்ல வந்து ரொம்ப நே......ரம் களிச்சுதான் தமிழ்மணத்துல வருதே அது ஏன்?
பிரபல பதிவரும் ஔவையாரும்!
வாத்யார், நம்ம தமிழ்மணத்துல இன்னா நடக்குதோ இல்லியோ வருஷத்துக்கு நாலு தபா யாராவது ஒரு பிரபல பதிவரு 'விடைபெறுகிறேன்' ன்னு ஒரு ஃபிலிம் காட்டுறது மட்டும் கண்டிப்பா நடந்தே தீரும். ஒடெனே ஒரு பதினஞ்ச்சு பேரு "போவதே, போவாதே என் பதிவா"ன்ற கணக்கா பின்னூட்டம் போட்டு தாக்கி அவுர மறுபடி இட்டாந்துருவாங்க. (அந்த காலத்துல ஒரு பதிவரு யாரும் கூப்டாமயே ஸைலன்டா தானாவே திரும்ப வந்துட்டாரு! அது வேற கத!!!).
Top Secret! ஆபீஸில் ரகசியமாக தமிழ்மணம் படிக்க வேண்டுமா?
- வாத்யார்... ஆபீஸ்ல எவ்ளோதான் ஆணி பிடுங்கினாலும், உங்க டேமேஜர் உங்க பின்னாலியே நின்னுகினாலும்...யாருக்கும் தெரியாம ரகசியமா தமிழ்மணம் படிக்கணுமா?
- இதெல்லாம் ஒரு பதிவாங்காட்டியும்னு அல்லாரும் பெருமையா காறி துப்பினாலும் உடாம ஆபீஸ்லேயே பதிவு எளுதி தள்ளணுமா?
- கைக்கு வந்த வரியை கட் அண்ட் பேஸ்டு பண்ணி "நல்லா சொல்லிகிறே வாத்யாரே" ன்னு மத்த பேரு பதிவுக்கெல்லாம் ஆபீஸ்லியே பின்னூட்டம் போட்டு தாட்ண்மா?
- தமிழ்மணத்தின் சில மூத்த மற்றும் பிரபல பதிவர்கள் ஒருத்தரு மேல ஒருத்தர் பாஞ்சு பிராண்டி அன்போட போட்டு தாக்குறத ரகசியமா பட்ச்சு பரிந்துரை பட்டனை கிளிக்கோணுமா?

அட, எங்க இத்தினி நாளா ஆளையே காணும்?
வணக்கம் வாத்யார்!
பாத்து எத்தினி நாள் ஓடிப் பூட்ச்சு? சொகமா கீறீங்களா? வூட்டாண்ட அல்லாரும் சௌக்கியமா கீறாங்களா? நாட்ல எத்தினி விஷயம் நடந்து பூட்டுது? ஒலகமே கொஞ்சம் பொரண்டு வுளுந்து எழுந்து நின்னாலும் நம்ப தமிழ்மணம் எப்பவும் போல ஸ்டெடியா கீதுன்றது மெய்யாலுமே ஹாப்பியா கீதுப்பா! நீங்க கேக்குறத்துக்கு முன்னால ஒரு தபா நானே கேட்டுகிறேன்: "அட, எங்க இத்தினி நாளா ஆளையே காணும்?"
எப்பவும் போல அடிக்கடி வூட்டாண்ட வாங்க! என்ன நான் சொல்றது? கரீட்டா?
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
எப்டி இருந்த தமிழ்மணம் இப்டி ஆயி பூட்ச்சு!!!
இன்னிக்கி நாள் பூரா நம்ப இன்டர்னெட் மக்காராப் பூட்ச்சா, இப்பத்தான் வலைக் குள்ளார வரவே முடிஞ்சிது. வளக்கம் போல மொத வேலையா தமிழ்மணத்தத் தொறந்தா (ஜிமெயில் கூட அப்புறம் தான்!)... தலீவா, பக்குனு ஆகிப் பூட்ச்சு!
இத்தினி நாளா கூகிளுக்கு அட்த்தது தமிழ்மணம் தான்னுட்டு தமிழ் தெரியாத வெப் டெவலப்பர் ஆசாமிங்களக் கூட கூப்டுக் கூப்டு காம்சிகினு இருந்தேன். இன்னா ஒரு சிம்பிள் டிசைன்ல சூப்பர் பெர்பார்மன்ஸு! நாள் பூரா (மெய்யாலுமே நாள் பூராத்தான்) பாத்துகினே இருந்தாலும் கண்ண உறுத்தாத ஒரு அம்சமான டிசைன்.
யார் கண்ணு பட்டுச்சோ, திடீர்னு இப்டி ஆகிப் பூட்ச்சு! ஒரு பத்து நிமிட் பாக்குறதுக்குள்ளார டயர்டா பூட்டுதுப்பா. கலர் கலராத்தான் கீது ஆனாலும் அந்த க்ளாரிட்டி எங்க பூட்டுது?
நம்ப அண்ணாத்த சொல்றாரு, எதுவுமே மாறின ஒடனே அப்டிதான் இருக்கும். போக போக பளகிப் பூடும்னு. பெரிய மன்ஸன் சொன்னா கரீட்டாத்தான் இருக்கும்.
நீங்க இன்னா சொல்றீங்க?
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு