Showing posts with label மனைவி. Show all posts
Showing posts with label மனைவி. Show all posts

ஒரு கிளு கிளு காதல் கதை (கண்டிப்பாக 18+)!

இரவு நேரம். தூரத்தில் எங்கோ மணி பதினொன்று அடித்து ஓய்ந்தது. கல்யாணமாகி இன்றோடு இருபது வருஷம் ஆகிவிட்டது. அவள் கண்களை மூடியபடி படுக்கையில் புரண்டு படுத்தாள்.


திடீரென்று அவளுடைய கணவனின் கை அவளுடைய கழுத்தின் பின்புறம் மெதுவாகத் தடவியது. என்ன ஆச்சரியம்! இருந்தாலும் அவள் கண்களைத் திறக்கவில்லை! அவனுடைய கை கழுத்திலிருந்து இப்போது அவளுடைய முதுகை நோக்கி மெல்ல நகர்ந்தது. அவனுடைய மூச்சுக் காற்றை சுலபத்தில் கேட்க முடிந்தது. அவள் பிடிவாதமாக கண்களை மூடியபடி கவனித்தாள்.

அவனுடைய கை இப்போது முதுகைத் தாண்டி அவளுடைய இடுப்பை நெருங்கிவிட்டது. அவளுடைய இதயம் சிலிர்த்தது. இருந்தாலும் கண்ணைத் திறக்கவில்லை. அவனுடைய கையின் பயணம் இன்னும் நிற்கவில்லை. இடுப்பையும் தாண்டி அவளுடைய முழங்கால்களுக்குக் கீழே ஒரு கணம் தயங்கியது. அடுத்த கணம் அவளுடைய பாதங்களுக்கு அடியில் சட்டென்று நகர்ந்தது.

மூடிய இமைகளுக்குள் அவளுடைய கண்கள் பட படத்தன.

அந்த நொடியில் திடீரென்று டிவி உயிர் பெற்றது. "உலகத் தொலைக் காட்சிகளில் முதல் முதலாக...!"

"என்னாங்க... என்ன ஆச்சு?"

...


...


...


...


...


...


...


...


"டிவி ரிமோட் கெடச்சுடுச்சு!"


வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு



39096

கெட்டப் பழக்கம் இருப்பவர்கள் இதை படிக்க வேண்டாம்!!!


ஐயா! சாமி! தருமம் பண்ணுங்க சாமி!

அட போப்பா, காலங்கார்த்தால கார் பார்க்குல வந்து டிஸடர்ப் பண்ணாத.

ஐயா தர்ம தொரை எதுனாச்சும் குடுங்கய்யா.

சரி சரி, இங்க வா. இந்த டீ கடையில ஒரு டீ சாப்பிடு. பில்லை நான் குடுக்கறேன்.

இல்லீங்கய்யா. டீ, காப்பி அல்லாம் கெட்ட பழக்கம் அய்யா. நான் சாப்பிட மாட்டேங்கய்யா.

என்னாது? அப்டீன்னா இந்தா இந்த சிகரெட்டை வச்சுக்க. ட்ரிபிள் ஃபைவ் ரொம்ப நல்ல பிராண்டு.

இல்லீங்கய்யா, சிகரெட் புடிக்குறது ரொம்ப கெட்டபழக்கம் அய்யா. வாணாங்க அய்யா.

இது என்னப்பா வம்பாப் போச்சு. இந்த கடையில ஒரு பாட்ட்ல் பீர் வாங்கிக்க. நான் பணம் கொடுத்துடறேன்.

வாணாங்கய்யா, குடிக்குறது ரொம்ப கெட்ட பழக்கங்க அய்யா. வாணாங்கய்யா.

அடக் கடவுளே! கடசியா உனக்கு ஒரு சான்ஸ் தரேன். நான் இப்ப ரேஸ் ஆடறத்துக்குதான் போயிட்டு இருக்கேன். முதல் ரேஸ்ல உன் பேர்ல பணம் கட்டறேன். எவ்ளோ கெடச்சாலும் எல்லாத்தையும் நீயே வச்சுக்கலாம். என்ன சொல்றே?

மன்னிச்சுக்கங்க அய்யா. ரேஸுக்கு போறது ரொம்ப கெட்ட பழக்கம் அய்யா. வாணாங்க அய்யா.

அடடா! இந்தா என் விசிட்டிங் கார்டு. இன்னிக்கு சாயங்காலம் என்ன வீட்டுல வந்து பாரு!

ரொம்ப தாங்க்ஸ் அய்யா. கண்டிப்பா வர்றேங்க அய்யா. வூட்டுக்கு வந்தா எதுனாச்சும் தரீங்களா அய்யா?



...

...

...

...

...

...

...

...

...


அது இல்லப்பா... எந்த கெட்ட பழக்கமுமே இல்லாத ஒரு ஆளு எப்டி இருப்பான்னு என் பொண்டாட்டிக்கு காட்டணும், அதான்!




வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு



36900

ஜாக்கிரதை! உங்கள் மனைவிக்குத் தெரியாமல் படிக்கவும்!!! (18+)


டார்லிங்!

என்னாங்க, நான் கிச்சன்ல இருக்கேன்!

கிச்சன்ல என்ன பண்ணிட்டு இருக்கே?

தோசை பண்ணிட்டு இருகேங்க!

தோசையா? ஜாக்கிரதை! ஜாக்கிரதை! இன்னும் கொஞ்சம் எண்ணை விடு!
சீக்கிரம்! சீ...கிரம்! பாத்து....பாத்து....
கையை சுட்டுக்கப் போற... ஜாக்கிரதை.... இவ்ளோ எண்ணையா விடுவாங்க...
பாத்து.... கீழ எல்லாம் சிந்துது பாரு.. சீக்கிரம்... சீக்கிரம்... திருப்பு... திருப்பு....
தோசையை திருப்பு..... கறுப்பாயிடும்...
பாரு பாரு இன்னும் கொஞ்சம் எண்ணை வேணும்...
சீக்கிரம்.... தோசை பண்ணும் போது நான் சொன்னதை என்னிக்குதான் கேட்டு இருக்கே?
பயமா இருக்கு...
இன்னிக்கு கல்லுல தான் ஒட்டிக்க போவுது....
ஜாக்கிரதை....சீக்கிரம்... உப்பு...உப்பு...
எங்க வச்சு இருக்கே? உப்பு போட்டியா இல்லியா?
எங்க வேடிக்கை பாக்குறே? தோசை பண்ணும் போது அடுப்ப நேரப் பாத்து பண்ணனும்....
கையை சுட்டுக்கப் போறே....
பாத்து... பாத்து....
ஜாக்கிரதை...
சீக்கிரம்.. சீக்கிரம்...சீக்கிரம்...
திருப்பு.. திருப்பு....



என்னாங்க ஆச்சு உங்களுக்கு? கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம் ஆச்சு. எனக்கு ஒரு தோசை பண்ணத் தெரியாதா?


...

...

...

ஹி.. ஹி... நான் கார் ஓட்டும் போது நீ பண்றது எனக்கு எப்டி இருக்கும்னு இப்ப புரியுது இல்ல?



வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

35770

பிறந்த நாளில் மனைவியை மகிழ்விப்பது எப்படி?



என்னங்க! என் பொறந்தநாளுக்கு என்ன வாங்க போறீங்க?

நீயே சொல்லு உனக்கு என்ன வேணும்?

அது வந்துங்க...

சும்மா சொல்லு... நீ கேட்டு நான் மாட்டேன்னு சொல்லுவேனா?

அது வந்துங்க... போன வாரம் கார் ரேஸ்ல பார்த்தோமே, கறுப்பு கலர்ல ஒண்ணு. அஞ்சு செகண்டுல 120 டச் பண்ணுமே அது மாதிரி ஒண்ணு வாங்கலாங்க!

அஞ்சு செகண்டுல 120... கறுப்பு கலரு அவ்ளோதானே, இன்னிக்கே ஆர்டர் பண்ணிடறேன்!

ஹி..ஹி... நீங்க ஸோ ஸ்வீட்டுங்க...


...


...


...


...


...


...


...


...


...







அப்டிதான் சிரிச்சுகிட்டே இருக்கணும். வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

உங்களுக்கு காது கேட்குமா? (ஒரு சின்ன Test ஹி..ஹி..)


டாக்டர், என் மனைவிக்கு சரியா காது கேக்குதான்னு சந்தேகமா இருக்கு.

சரி...

ஹியரிங் எய்ட் போடணுமா வாணாமான்னு எப்படி செக் பண்ணறது டாக்டர்?

ரொம்ப ஈஸி! மொதல்ல ஒரு 20 அடி தள்ளி நின்னு சாதாரணமா பேசற குரல்ல ஒரு கேள்விய கேளுங்க. காதுல விழுதான்னு கவனிங்க.

அப்புறம்?

காதுல விழலேன்னா 10 அடி தூரத்துல இருந்து அதே கேள்விய கேளுங்க.

சரி டாக்டர்.

அதுவும் சரியா காதுல விழலேன்னா 5 அடி தூரத்துல இருந்து மறுபடியும் அதே கேள்விய கேளுங்க.

அதுவும் விழலேன்னா?

ரொம்ப பக்கத்துல வந்து மறுபடியும் கேளுங்க. காது கேக்குதா இல்லையான்னு நாளைக்கு வந்து சொல்லுங்க.

ரொம்ப தாங்க்ஸ் டாக்டர்.


@@@
@@@
@@@



(15 அடி) டார்லிங்! இன்னிக்கு டின்னருக்கு என்ன பண்ணியிருக்கே?...
" ____ "



(10 அடி) டார்லிங்! இன்னிக்கு டின்னருக்கு என்ன பண்ணியிருக்கே?
" ____ "



(5 அடி) டார்லிங்! இன்னிக்கு டின்னருக்கு என்ன பண்ணியிருக்கே?
" ____ "



டார்லிங்! இன்னிக்கு டின்னருக்கு என்ன பண்ணியிருக்கே?

...


...


...


...


...


...


...


கடவுளே! இதோட நாலு தடவை சொல்லிட்டேன் வெங்காய சாம்பார்னு! உங்க காதை நல்ல டாக்டரா பார்த்து காட்டித் தொலைங்க!!!




வாத்யார்! உங்க காது சரியாத்தான இருக்கு?.... வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு







அவனும் அவளும்... தனியாக ரயில் கூப்பேவில் (18+ சிறுகதை)!!!


ஹலோ!

ஹலோ!!

இந்த கூப்பேல வேற யாரும் இல்ல போலிருக்கு...

ஐ திங்க் ஸோ... அது வந்து... தட்கால்ல கடசீல போட்டதுனால... வந்து... இப்படி அலாட் பண்ணிட்டாங்க போல இருக்கு... உங்களுக்கு ஒண்ணும்...

ரொம்ப குளுருது ஜன்னல சாத்திரலாமா?

அது வந்து... சரிங்க...

டிடிஆரும் வந்துட்டு போய்ட்டாரு. மணி பத்தாயிடுச்சு. அடுத்த ஸ்டேஷன் காலைலதான் வரும்.

அதுனால...?

ராத்திரில திருட்டு பயம் ஜாஸ்தி. கூப்பே கதவை சாத்திரலாமா?

அது...அது... வந்து...சரிங்க...

நான் கீழ் பெர்த்துல படுத்துக்கறேன். நீங்க மேல் பெர்த்த எடுத்துக்கங்க.

சரிங்க.

*******************************************************

ஹலோ... வந்து... பாதி ராத்திரில டிஸ்டர்ப் பண்றேனேன்னு நெனச்சுகாதீங்க...

இல்ல பரவால்ல சொல்லுங்க.

வந்து... ரொம்ப குளுரா இருக்கு. இஃப் யூ டோண்ட் மைண்ட்....கீழே சீட்டுக்கு அடீலேர்ந்து அந்த ரெட் பிளான்கட்டை எடுத்துத் தரீங்களா? வந்து.... மேல் பெர்த்லேர்ந்து எட்டலை.

அதை விட சூப்பரா நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா?

என்னங்க?

இன்னிக்கு ஒரு ராத்திரி மட்டும் நம்ப ரெண்டு பேரும் கல்யாணம் ஆனவுங்க மாதிரி ஆக்ட் பண்ணிக்கலாமா?

ஆங்... எ...ன்...ன...ங்..க....? ச...ரி...ங்...க...

*

*

*

*

*

*

*

*

*

*

(குறுக்க வர்றதுக்கு மன்ச்சுக்க வாத்யார்.
இன்னும் ஒரே வரியில் இந்த கதை முடியப் போவுது!)

*

*

*

*

*

*

*

*

அப்படீன்னா நீங்களே இறங்கி வந்து பிளான்கட்டை எடுத்துட்டு போங்க. பாதி ராத்திரில தொண தொணன்னு பேசி ஏன் என் உயிர வாங்கறீங்க?




இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


For Husbands Only! (மனைவிகள் படிக்க வேண்டாம்)!!


ஆஹா! வாத்யார் படா கில்லாடியான ஐடியாவா கீது! அடுத்த தபா ட்ரை பண்ணி பாருங்க! (டிஸ்கி: விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பு!)





அப்பால, மனைவிகளுக்கு ஒரு சின்ன... அது இன்னாது....ஆங்... ரிக்வஸ்டு (நான் இன்னாதான் தலைப்பு வச்சாலும் படிக்காமயா இருக்க போறீங்க!): ஆபீஸுக்கு போன் பண்ணா இந்த ஹஸ்பண்டுக்கும் பத்து நிமிஷத்துக்கு ஒரு தபாவாவது ரெண்டு வார்த்தை பேசறதுக்கு ஒரு சான்ஸ் கொடுங்க. இல்லாங்காட்டி பாருங்க இன்னா டகாலடி வேலையெல்லாம் பண்றாங்க!


வாத்யார்! அங்க பாருங்க உங்க போன் அடிக்குது.... ஹலோ... ம்.... ம்ம்... ம்ம்ம்... ம்ம்... ம்ம்ம்...


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு