Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

ரொம்ப சுலபமான கேள்வி (ஒரு பைத்தியக்கார சிறுகதை!)


டாக்டர் எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்.

சொல்லுங்க.

உங்க ஹாஸ்பிடல்ல இருக்கிற பேஷண்டுகளுக்கு பைத்தியம் குணமாயிடுச்சுன்னு எப்படி ஃபைனலா முடிவு பண்ணுவீங்க டாக்டர்?

ஓ! அதுவா? மெடிக்கல் டெஸ்ட்டு எல்லாம் முடிஞ்ச பிறகு கடைசியா ரொம்ப சுலபமா ஒரு கேள்வி கேட்போம். அதுக்கு நார்மலா எல்லாரும் சொல்ற பதிலை சொல்லிட்டா டிஸ்சார்ஜ் பண்ணி அனுப்பிடுவோம். இல்லையென்றால் மறுபடியும் அட்மிட் பண்ண வேண்டி இருக்கும்.

ரொம்ப சுலபமான கேள்வின்னா என்ன டாக்டர்? ஒரு உதாரணம் சொல்லுங்களேன்.

சொல்றேன். உதாரணமா இந்த கேள்வியை சொல்லலாம். "கேப்டன் ஜார்ஜ் மூணு தடவை கடல் பயணம் போனார். இந்த மூணு பயணங்களில் ஒன்றின் போது கப்பல் மூழ்கி அவர் இறந்துவிட்டார். அது எந்த பயணத்தின் போது?"

...

...

...

...

...

...

ஹி..ஹி.. டாக்டர். நானே ஹிஸ்டரில கொஞ்சம் வீக். வேற ஒரு உதாரணம் சொல்ல முடியுமா?




வாத்யார்ஸ்! நீங்க எல்லாம் க்ரீட்டாதான் பதில் சொல்லியிருப்பீங்க. இன்னா நான் சொல்றது?

வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

அவனும் அவளும்... தனியாக ரயில் கூப்பேவில் (18+ சிறுகதை)!!!


ஹலோ!

ஹலோ!!

இந்த கூப்பேல வேற யாரும் இல்ல போலிருக்கு...

ஐ திங்க் ஸோ... அது வந்து... தட்கால்ல கடசீல போட்டதுனால... வந்து... இப்படி அலாட் பண்ணிட்டாங்க போல இருக்கு... உங்களுக்கு ஒண்ணும்...

ரொம்ப குளுருது ஜன்னல சாத்திரலாமா?

அது வந்து... சரிங்க...

டிடிஆரும் வந்துட்டு போய்ட்டாரு. மணி பத்தாயிடுச்சு. அடுத்த ஸ்டேஷன் காலைலதான் வரும்.

அதுனால...?

ராத்திரில திருட்டு பயம் ஜாஸ்தி. கூப்பே கதவை சாத்திரலாமா?

அது...அது... வந்து...சரிங்க...

நான் கீழ் பெர்த்துல படுத்துக்கறேன். நீங்க மேல் பெர்த்த எடுத்துக்கங்க.

சரிங்க.

*******************************************************

ஹலோ... வந்து... பாதி ராத்திரில டிஸ்டர்ப் பண்றேனேன்னு நெனச்சுகாதீங்க...

இல்ல பரவால்ல சொல்லுங்க.

வந்து... ரொம்ப குளுரா இருக்கு. இஃப் யூ டோண்ட் மைண்ட்....கீழே சீட்டுக்கு அடீலேர்ந்து அந்த ரெட் பிளான்கட்டை எடுத்துத் தரீங்களா? வந்து.... மேல் பெர்த்லேர்ந்து எட்டலை.

அதை விட சூப்பரா நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா?

என்னங்க?

இன்னிக்கு ஒரு ராத்திரி மட்டும் நம்ப ரெண்டு பேரும் கல்யாணம் ஆனவுங்க மாதிரி ஆக்ட் பண்ணிக்கலாமா?

ஆங்... எ...ன்...ன...ங்..க....? ச...ரி...ங்...க...

*

*

*

*

*

*

*

*

*

*

(குறுக்க வர்றதுக்கு மன்ச்சுக்க வாத்யார்.
இன்னும் ஒரே வரியில் இந்த கதை முடியப் போவுது!)

*

*

*

*

*

*

*

*

அப்படீன்னா நீங்களே இறங்கி வந்து பிளான்கட்டை எடுத்துட்டு போங்க. பாதி ராத்திரில தொண தொணன்னு பேசி ஏன் என் உயிர வாங்கறீங்க?




இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு