உங்களுக்கு காது கேட்குமா? (ஒரு சின்ன Test ஹி..ஹி..)


டாக்டர், என் மனைவிக்கு சரியா காது கேக்குதான்னு சந்தேகமா இருக்கு.

சரி...

ஹியரிங் எய்ட் போடணுமா வாணாமான்னு எப்படி செக் பண்ணறது டாக்டர்?

ரொம்ப ஈஸி! மொதல்ல ஒரு 20 அடி தள்ளி நின்னு சாதாரணமா பேசற குரல்ல ஒரு கேள்விய கேளுங்க. காதுல விழுதான்னு கவனிங்க.

அப்புறம்?

காதுல விழலேன்னா 10 அடி தூரத்துல இருந்து அதே கேள்விய கேளுங்க.

சரி டாக்டர்.

அதுவும் சரியா காதுல விழலேன்னா 5 அடி தூரத்துல இருந்து மறுபடியும் அதே கேள்விய கேளுங்க.

அதுவும் விழலேன்னா?

ரொம்ப பக்கத்துல வந்து மறுபடியும் கேளுங்க. காது கேக்குதா இல்லையான்னு நாளைக்கு வந்து சொல்லுங்க.

ரொம்ப தாங்க்ஸ் டாக்டர்.


@@@
@@@
@@@



(15 அடி) டார்லிங்! இன்னிக்கு டின்னருக்கு என்ன பண்ணியிருக்கே?...
" ____ "



(10 அடி) டார்லிங்! இன்னிக்கு டின்னருக்கு என்ன பண்ணியிருக்கே?
" ____ "



(5 அடி) டார்லிங்! இன்னிக்கு டின்னருக்கு என்ன பண்ணியிருக்கே?
" ____ "



டார்லிங்! இன்னிக்கு டின்னருக்கு என்ன பண்ணியிருக்கே?

...


...


...


...


...


...


...


கடவுளே! இதோட நாலு தடவை சொல்லிட்டேன் வெங்காய சாம்பார்னு! உங்க காதை நல்ல டாக்டரா பார்த்து காட்டித் தொலைங்க!!!




வாத்யார்! உங்க காது சரியாத்தான இருக்கு?.... வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு







7 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

டம் டமார்..,

ஜாம்பஜார் ஜக்கு said...

சுரேஷ் வாத்யார்!

//டம் டமார்..//

நீங்க ஓட்டு போட்ட சத்தம் தானே அது?!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஒரு காசு said...

எப்படி டாக்டர் சொன்னப்ப மட்டும் அந்த ஆளுக்கு கேட்டிச்சி ?

ஜாம்பஜார் ஜக்கு said...

//எப்படி டாக்டர் சொன்னப்ப மட்டும் அந்த ஆளுக்கு கேட்டிச்சி ?//

ஆஹா! டாக்டர் இன்னா 20 அடி தூரத்துல இருந்தா சொன்னாரு? பக்கத்துல இருந்து சொல்லி இருப்பாரு வாத்யார்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

டாக்டர் said...

ஹா..ஹா..ஹா..!

வைத்தியநாதன் said...

ஸ்..அப்பா...

சாமக்கோடங்கி said...

சூப்பரு....