வாத்யார் எங்க கொஞ்ச நாளா ஆளையே காணும்னு யோசிக்கிறீங்களா? சொன்னா நம்ப மாட்டீங்க இந்த கேப்புக் குள்ளார ஒரு புது டெக்னாலஜி கண்டு புடிச்சுக் கீறாங்களாம். (வேற எங்க, அமெரிக்காவுல ஏதோ ஒரு வாய்ல நுழையாத ஒரு யூனிவர்ஸிட்டிலதான்).
அந்த டெக்னாலஜியோட பேரு web-based olfactory stimulation (WOS Technology). அது இன்னா மேட்டருன்னா ரெண்டு டைமென்ஷன், மூணு டைமென்ஷன் அல்லாம் தாண்டி ஒரு சின்ன ட்ரிக் பண்ணி வலைப்பதிவுலே இருந்து உங்க olfactory nerves (அதான் வாத்யார், மூக்குக் குள்ளார கீற சென்சார்ஸ்) அல்லாம் தூண்டி உடலாம்னு கண்டு புடிச்சுக் கீறாங்களாம்.
உங்களுக்காகவே ஸ்பெஷலா அதுலேர்ந்து ஒரு சின்ன பீஸ் கீழே குடுத்துக்கிறேன் பாருங்க.
கீழே இருக்கிற பட்டனை தொடர்ந்து 7 செகண்டு க்ளிக் அண்ட் ஹோல்ட் பண்ணீங்கன்னா உங்க olfactory nerves அல்லாம் stimulate ஆகி சுமார் மூணு செகண்ட் நேரம் கற்பூர வாசனை தெரியும்.
ட்ரை பண்ணி பாருங்க!
இன்னா கரீட்டா? தெரிஞ்சுதா கற்பூர வாசனை?
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
46440
12 comments:
யோவ்,
உங்கூட இதே சலம்பலாப் போச்சு ஆனா உன் சைட்டுக்க வராம இருக்கவும் முடியலை. நீ ஒரு போதை. எத்தனை தடவை அடி வாங்கினாலும் அறிவு வரமாட்டெங்குதே.
இப்படி பண்றது ஒரு பொழப்ப இருந்தாலும்............... நன்று வோட்டு போட்டுட்டேன்
எனக்கு வந்துகிணுது வாஜாரே ! ஆனாக்க அது கற்பூர வாஜன இல்ல.
முனிம்மாக்கா ஆப்பக்கட பாயா வசன இல்ல வர்து?!
உன் மூக்கு ஓட்டைய டாக்டராண்ட காட்டி லிப்பேறு பண்ணிவியா ?!
அத்த வுட்டுகினு இன்னாவோ பயாஸ்கோப்பு காடிகினுகீர ?!
ஒண்ணும் தெரிய...ஆஹா...கற்பூரமா... அட ஆமா நல்லா தெரியுது!
ஹி..ஹி..எதுக்கு வம்பு?
:-))))
//எத்தனை தடவை அடி வாங்கினாலும் அறிவு வரமாட்டெங்குதே//
அதான், அதான், அதேதான்
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
// அமெரிக்காவுல ஏதோ ஒரு வாய்ல நுழையாத ஒரு யூனிவர்ஸிட்டிலதான்)//
அவங்கவங்க வாய்ல ஒரு கை சோறு போடவே தெணற்ர்ரான்! நீ ஒரு யூனிவர்சிடியே போட பாக்குறேயேம்மா!
அப்பொறொம் வாஜனை தெர்லேன்னா இன்னா களுதன்னு சொல்லிறியா?
thirumbavumaa........
a vv vv vv vv vv vv
:-)
அடப்பாவமே... இவிக நம்மள விட பெரிய அ(ட)ப்பாவியா இருப்பாக போல இருக்கே...
GRRRRRRRRRRRRRRRRRRRRR
GRRRRRRRRRRRRRRRRRRRRR
GRRRRRRRRRRRRRRRRRRRRR
Post a Comment