வாத்யார் எங்க கொஞ்ச நாளா ஆளையே காணும்னு யோசிக்கிறீங்களா? சொன்னா நம்ப மாட்டீங்க இந்த கேப்புக் குள்ளார ஒரு புது டெக்னாலஜி கண்டு புடிச்சுக் கீறாங்களாம். (வேற எங்க, அமெரிக்காவுல ஏதோ ஒரு வாய்ல நுழையாத ஒரு யூனிவர்ஸிட்டிலதான்).
Showing posts with label Technology. Show all posts
Showing posts with label Technology. Show all posts
பதிவர்களுக்கான புதிய டெக்னாலஜி! (Dont Miss !!!)
அந்த டெக்னாலஜியோட பேரு web-based olfactory stimulation (WOS Technology). அது இன்னா மேட்டருன்னா ரெண்டு டைமென்ஷன், மூணு டைமென்ஷன் அல்லாம் தாண்டி ஒரு சின்ன ட்ரிக் பண்ணி வலைப்பதிவுலே இருந்து உங்க olfactory nerves (அதான் வாத்யார், மூக்குக் குள்ளார கீற சென்சார்ஸ்) அல்லாம் தூண்டி உடலாம்னு கண்டு புடிச்சுக் கீறாங்களாம்.
உங்களுக்காகவே ஸ்பெஷலா அதுலேர்ந்து ஒரு சின்ன பீஸ் கீழே குடுத்துக்கிறேன் பாருங்க.
கீழே இருக்கிற பட்டனை தொடர்ந்து 7 செகண்டு க்ளிக் அண்ட் ஹோல்ட் பண்ணீங்கன்னா உங்க olfactory nerves அல்லாம் stimulate ஆகி சுமார் மூணு செகண்ட் நேரம் கற்பூர வாசனை தெரியும்.
ட்ரை பண்ணி பாருங்க!
இன்னா கரீட்டா? தெரிஞ்சுதா கற்பூர வாசனை?
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
46440
Labels:
Technology,
ஆராய்ச்சி
ZOOM..! சந்திராயன் எடுக்காத சில ரகசிய புகைப்படங்கள்!
Labels:
Technology,
மொக்கை | நையாண்டி
Printer வேலை செய்யாத போது அவசரமாய் காப்பி எடுப்பது எப்படி?
கம்ப்யூட்டர் மானிட்டர்ல ஒரு டாக்குமென்ட் கீது. ஆனா உங்க ஆபீஸ்ல பிரிண்டர் திடீர்னு வேல செய்யலன்னு வச்சுக்கங்க. இப்ப அவசரமா அந்த டாகுமென்ட பேப்பர்ல எப்டி காப்பி பண்ணுவீங்க?
இதெல்லாம் டெக்னிகல் சமாச்சாரம்.
பிரிண்டர் இல்லாம காப்பி எடுக்க முடியும்னு மெய்யாலுமா நெனைக்கிறீங்க?
ரொம்ப நல்லவரா இருக்கீங்க...
இவ்ளோ தூரம் வந்துட்டீங்க...
சொல்றேனேன்னு தப்பா நெனச்சுக் காதீங்க...
இப்டி வாணா ட்ரை பண்ணி பாருங்க...
வர்ட்டா?
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
Labels:
Technology,
ஆராய்ச்சி,
மொக்கை | நையாண்டி
Revealing Secret! கூகுளின் ரகசிய பக்கங்கள்!!!!
வாத்யார் வர வர கூகுள் இல்லாம பல் தேய்க்ககூட முடியாதுன்னு ஆகி போச்சு. இன்னாதான் ஒரு நாளைக்கு நூறு தபா கூகுள மேஞ்சாலும் அதுல இருக்கிற சில ரகசிய பக்கங்களை நீங்க பாத்திருக்க மாட்டீங்க.
அதுக்கு முன்னால ஒரு சின்ன புதிர்:
கீள கீற மூணு கூகுள்ல எது சரியான கூகுள்? (இத்த செக் பண்றதுக்கும் கூகுள்ல தேடக்கூடாது. ஒடனே சொல்லணும், ஆமா!).



இப்ப கூகுளோட ரகசிய பக்கங்களை பார்க்கலாமா? சொன்னா நம்பணும். இதுல ட்ரிக்ஸ் ஒண்ணும் கெடையாது வாத்யார். மெய்யாலுமே கூகுள் பக்கங்கள் தான். ஒண்ணு ஒண்ணா க்ளிக் பண்ணி பாருங்க!
கூகுள் மென்டல்ல நீங்க நெனச்ச படத்த கரீட்டா பாத்தீங்களா? டென்ஷன் ஆவாதீங்க! இன்னா படத்த நெனச்சீங்கன்ன்னு பின்னூட்டத்துல போட சொல்லி கேக்க மாட்டேன் வாத்யார்!
இப்படிக்கு
Labels:
Technology,
கூகுள்,
விளையாட்டு/புதிர்
Install Immediately! பின்னூட்ட ஜெனரேட்டர்! Guaranteed to Work!
வாத்யார், உங்க பதிவுக்கு வரவுங்க பதிவப் படிச்சுட்டு பின்னூட்டம் போடாம எஸ்கேப் ஆயிட்றாங்களா? ஹிட் கவுண்டர் 200 இல்ல 300ன்னு எகிறிகினே போனாலும் பின்னூட்டம் மட்டும் வுள மாட்டேன்னுதா? கவலைய உடுங்க! உங்களுக்குன்னே அமெரிக்காவுல புதுசா பின்னுட்ட ஜெனரேட்டர்ன்னு ஒண்ணு கண்டு புடிச்சு கீறாங்க!இத்த மட்டும் நீங்க உங்க பதிவுல இன்ஸ்டால் பண்டீங்கன்னு வைங்க, அப்பாலிக்கா உங்க பதிவுக்கு வர்ற அல்லாரும் பின்னூட்டம் போடாம திரும்பவே மாட்டாங்க.இன்னா? வளக்கம் போல சொன்னா நம்ப மாட்டீங்களா? அப்டீன்னா அப்டியே கீள வாங்க...பின்னூட்ட ஜெனரேட்டரை இன்ஸ்டால் பண்ணிக்கிறேன்...நீங்களே பாருங்க.....................இன்னா இன்ஸ்டால் ஆயிட்ச்சா?இப்போ இதுமேல ஒரு க்ளிக் பண்ணுங்க, நான் சொல்றது உங்களுக்கே புரியும்!இன்னா கரீட்டா வர்க் பண்ணுதா வாத்யார்?இப்படிக்குஜாம்பஜார் ஜக்கு
Labels:
Technology,
டமாஸு,
மொக்கை | நையாண்டி
வாலிப வயோதிக அன்பர்கள் மன்னிக்கவும்!
சின்ன வயசுல Super Mario விளையாடி பைத்தியம் புடிச்சிருக்கீங்களா? அப்டீன்னா இத்த ஒரு தபா பாருங்க! ஆடி பூடுவிங்க! வெறும் 5.21 நிமிட்ஸ் வாத்யார்!!!
இந்த வீடியோ யூ-டியூபுல வந்தப்போ 4500 பின்னூட்டத்துக்கு மேல போட்டு தாக்கிட்டாங்க! (சரி.. சரி...காதுல புகையா வருது பாருங்க!)
World Record, Cheat Code, Fake, இன்னாவோ ஏமாத்றாங்க... இன்னா வேணா சொல்லுங்க, இப்போ பாத்தாலும் டென்ஷனாத்தான் கீது வாத்யார்!
Super Marioன்னா இன்னான்னு கேக்குறவங்க தலைப்ப ஒரு தபா படிச்சுருங்க. போலாம்...ரை....ட்!!!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
Labels:
Technology,
விளையாட்டு/புதிர்
Urgent! Microsoft Calculatorல் ஒரு பிராபளம்! Please Help!!!
சொன்னா நம்ப மாட்டீங்க மைக்ரோ சாஃப்ட் கால்குலேட்டர்ல ஒர் பிரபளம் கீது வாத்யார். வேணா நீங்களே ட்ரை பணணி பாருங்க:
உங்க கம்ப்யூட்டர்ல கால்குலேட்டர ஓப்பன் பண்ணிக்கங்க. என்ன மாதிரி ஆளா இருந்தா Start-->All Programs-->Accessories-->Calculator. இல்ல, நீங்க கம்யூட்டர்ல பெரிய புலியா இருந்தா Start-->Run- ->type Calc அப்டியும் பண்ணலாம்.
ஆச்சா? கால்குலேட்டர் வந்துட்சா? இப்போ இதப் பண்ணி பாருங்க!
2401/47 = 51.085106382978723404255319148936 கரீட்டா கீது
2401/48 = 50.020833333333333333333333333333 கரீட்டா கீது
2401/49 = வேல செய்ய மாட்டேங்குது வாத்யார்
2401/50= 48.02 கரீட்டா கீது
2401/51 = 47.078431372549019607843137254902 கரீட்டா கீது
Microsoft Calculator ஃபெயிலா பூட்சுப்பா!
இவ்ளோ காஸ்ட்லியா கம்ப்யூட்டர் வாங்கியும் கால்குலேட்டர் சரியா வேல பண்ணாங்காட்டி எப்டி வாத்யார்? நீங்களே ஒரு தபா ட்ரை பணணிப் பாத்து, இத்த எப்டி சரி பண்றதுன்னு பின்னூட்டத்துல கொஞ்சம் சீக்கிரமா சொல்லுங்க தலீவா!
2401/49 = வேல செய்ய மாட்டேங்குது வாத்யார்
2401/50= 48.02 கரீட்டா கீது
2401/51 = 47.078431372549019607843137254902 கரீட்டா கீது
Microsoft Calculator ஃபெயிலா பூட்சுப்பா!
இவ்ளோ காஸ்ட்லியா கம்ப்யூட்டர் வாங்கியும் கால்குலேட்டர் சரியா வேல பண்ணாங்காட்டி எப்டி வாத்யார்? நீங்களே ஒரு தபா ட்ரை பணணிப் பாத்து, இத்த எப்டி சரி பண்றதுன்னு பின்னூட்டத்துல கொஞ்சம் சீக்கிரமா சொல்லுங்க தலீவா!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
Labels:
Technology
Subscribe to:
Posts (Atom)





