காரி கோல்மேன்!
இந்த பேர் நியாபகத்துக்கு வர்லேன்னாலும் Different Strokes அப்டீன்னா ரொம்ப பேருக்கு டக்குனு புரியலாம். 1978லேர்ந்து 1986 வரைக்கும் சக்கை போடு போட்ட அந்த சீரியலில் (நம்ம தூர்தர்ஷன் உட்பட) வந்த துரு துரு, பட படா பையனை அவ்ளோ சீக்கிரத்தில் மறக்க முடியாது. "நீ இன்னான்ற வில்லீஸூ..!!!" (Whatchu talkin' 'bout, Willis?) அப்டீன்ற டைலாக்கு காதுகக்குள்ளாற் இன்னும் சுத்திகினு கீது வாத்யார்.
குழந்தை நட்சத்திரமா அப்டி அசத்தின பையன் பெரியவனான பின்னால எப்டி அல்லாம் வருவான்னு நெனச்சது உண்டு. நல்ல பேரை அல்லாம் தொலச்சு, சொந்த அப்பா அம்மா மேலயே கேஸ் போட்டு, அடிதடி கேஸ்ல அரஸ்ட் ஆகி, கொஞ்ச நாளைக்கி செக்யூரிட்டி கார்ட் வேலைக்குப் போயி.... வாணாம் இன்னாத்துக்கு... உடுங்க,
போன புதன்கிழமை காரிக்கு ஹெமரேஜ் ஆகி நேத்து வரை ஹாஸ்பிடலில் இருந்தார். இனனிக்கு இல்லை.
வர்ட்டா?
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
48480
3 comments:
அடடா...
தாங்க்ஸ் ஜக்கு சார்.
ஆஹா, புதிருக்கு இவ்ளோ சீக்கிரம் பதிலா? Zero to Infinity எங்கிருந்தாலும் சபைக்கு வரவும்!
ரவி
Sad...
Post a Comment