வர வர பிரபல பதிவரா இல்லாங்காட்டி வேலைக்கு ஆவாது போல கீது. பிரபல பதிவரா இருக்கிறதுன்னால இன்னா லாபம்னு கேக்குறீங்களா?
1) நீங்க இன்னா எளுதினாலும் ஒரு 500 பேரு வந்து அட்டென்டென்ஸ் போட்ருவாங்க.
2) இருவது பின்னூட்டம் கண்டிப்பா காரண்டி.
3) வேற பதிவருங்க எதுனாச்சும் நல்ல ப்திவு எளுதினா நீங்க அதுல பின்னூட்டம் போட வாணாம். அத்த அப்டியே தூக்கி உங்க பதிவுல போட்டு 'நான் ஆதரிக்கிறேன்" இல்லாங்காட்டி "எதிர்க்கிறேன்"ன்னு புது பதிவு போட்டுறலாம்.
4) செய்தி பதிவுன்னு தினமலர், தினத்தந்தின்னு எதுலேர்ந்துனாச்சும் காப்பி-பேஸ்ட் பண்ணி போட்டுறலாம்.
5) பத்து கேள்வி, இருவது பதில்னு போட்டுத் தாக்கலாம்.
6) தொடர் வெளையாட்டு வெளையாடலாம்.
7) நம்மள படிப்பவர்கள்னு கலர் கலரா ஃபோட்டோ போட்டுக்கலாம்.
8) அப்ப அப்போ எதுனாச்சும் சர்வே வச்சுகிறேன்னு கேள்வி கேக்கலாம்.
9) ..... .... .....
10) ...... ..... ...... ..... இது ரெண்டையும் உங்க சாய்ஸுக்கு உட்டுக்கிறேன். நீங்களே எளுதிக்கங்க!
அதெல்லாம் கேக்குறதுக்கு நல்லாத்தான் கீது. ஆனா பிரபல பதிவர் ஆவுறது எப்படின்னு கேக்குறீங்களா? ரொம்ப ஈஸி வாத்யார்:
1) உங்களுக்குன்னு "பிரபல பதிவர்" அவார்ட் மேல குடுத்து கீறேன். அத்த அப்டியே காப்பி பண்ணிக்கோங்க.
2) லே-அவுட் ஆப்ஷன்ல போய் இத்த உங்க் டெம்ளேட்ல சேத்து உட்றுங்க.
3) அவ்ளோதான் மேட்டர், நீங்களும் இப்போ பிரபல பதிவர் ஆய்டீங்க!!!
இன்னாது? அவார்ட் போட்டுக்க வெக்கமா கீதா? அப்டீன்னா நீங்க ஒரு நாலு பேருக்கு இத்த குடுக்கறதா ஒரு பதிவு போடுங்க. நீங்க நாலு பேருக்கு குடுத்தா ஒருத்தராவது உங்களுக்கு குடுக்காமலா பூடுவாங்க?
பதிவுக்கு பதிவு ஆச்சு! அவார்டுக்கு அவார்டு ஆச்சு!!! இன்னா, நான் சொல்றது, கரீட்டா?
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு.
26 comments:
புதுசு புதுசா விருது வருதுப்பா
இது கூட நல்லாத்தான் இருக்கு
:))
1) நீங்க இன்னா எளுதினாலும் ஒரு 500 பேரு வந்து அட்டென்டென்ஸ் போட்ருவாங்க.//
ம்கும் ஒரு 100 பேருக்கே நொண்டி அடிக்குது:(
//2) இருவது பின்னூட்டம் கண்டிப்பா காரண்டி.// ஸ்ஸ்யப்பா! ஒருத்தர் போட்ட பின்னூட்டதுக்கு நானே 19 வாட்டி நன்றி சொன்னாதான் 20 வரும்:(
//3) வேற பதிவருங்க எதுனாச்சும் நல்ல ப்திவு எளுதினா நீங்க அதுல பின்னூட்டம் போட வாணாம். அத்த அப்டியே தூக்கி உங்க பதிவுல போட்டு 'நான் ஆதரிக்கிறேன்" இல்லாங்காட்டி "எதிர்க்கிறேன்"ன்னு புது பதிவு போட்டுறலாம்.//
இதுவரை செஞ்சது இல்ல , இனி முயற்சி செய்கிறேன்!
//4) செய்தி பதிவுன்னு தினமலர், தினத்தந்தின்னு எதுலேர்ந்துனாச்சும் காப்பி-பேஸ்ட் பண்ணி போட்டுறலாம்.//
இதுக்கும் அதே பதில் தான்
//5) பத்து கேள்வி, இருவது பதில்னு போட்டுத் தாக்கலாம்.//
கேள்வின்னா கேட்டுவிடலாம் பதில் எல்லாம் சொல்லதெரியாதே:(
//6) தொடர் வெளையாட்டு வெளையாடலாம்.// இந்த டீல் எனக்கு புடிச்சு இருக்கு
//7) நம்மள படிப்பவர்கள்னு கலர் கலரா ஃபோட்டோ போட்டுக்கலாம்.//
ஆக்காண்ணே இது ஒன்னு தான் குறைச்சல்! ஆள் இல்லாத கடையில் டீ ஆத்தும் நான் என் போட்டோவையே கலர் மாற்றி போட்டுக்கிட்டாதான் உண்டு:(
//8) அப்ப அப்போ எதுனாச்சும் சர்வே வச்சுகிறேன்னு கேள்வி கேக்கலாம்.//
இதுக்கு கோடிங் எல்லாம் அடிக்கனும் போல இருக்கே?
9) ..... .... ..... //
.. .. .. நானு ரெண்டு புள்ளி வரிசையில் கோலம் போடுறேன்
10) ...... ..... ...... ..... இது ரெண்டையும் உங்க சாய்ஸுக்கு உட்டுக்கிறேன். நீங்களே எளுதிக்கங்க!
ஒன்னு கூட எழுத தெரியலையே, நான் எல்லாம் அப்படி ஆகவே முடியாதா?:(
ஏன் இவ்வளவு கஷ்டமெல்லாம் ..
எடிட் யூசர் ப்ரொஃபைல் போய் டிஸ்ப்ளே நேம் முன்னாடி பிரபல பதிவர்ன்னு சேர்த்துக்கிட்டா நாமளும் முப்பது வினாடிகளில் பிரபல பதிவர்தான். :))))
இந்த இடுகைக்கு எனது எதிர்/ஆதரவு இடுகையை வரும் திங்கட்கிழமை எதிர்பாருங்கள்.
சும்மா பளீர்னு சொல்லியிருக்கீங்க ஜக்கு. முதல் வேலையா ஒரு பதிவு ஆரம்பிக்க வேண்டியது தான்!!!
:)))
கலக்கல் பதிவு. நன்றி.
//எடிட் யூசர் ப்ரொஃபைல் போய் டிஸ்ப்ளே நேம் முன்னாடி பிரபல பதிவர்ன்னு சேர்த்துக்கிட்டா நாமளும் முப்பது வினாடிகளில் பிரபல பதிவர்தான். :))))//
ஹிஹி! நான் அப்ப்டித்தான் செஞ்சேன்!
//புதுசு புதுசா விருது வருதுப்பா//
சுரேஷ் வாத்யார், பிரபல பதிவர்களெல்லாம் போட்டுத் தாக்குறாங்க. ஏதோ நம்மளால ஆனது!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
வாங்க சீனா / நாமக்கல் சிபி,
ரொம்ப டாங்ஸுபா
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
//பிரபல பதிவர் நாமக்கல் சிபி said...
//எடிட் யூசர் ப்ரொஃபைல் போய் டிஸ்ப்ளே நேம் முன்னாடி பிரபல பதிவர்ன்னு சேர்த்துக்கிட்டா நாமளும் முப்பது வினாடிகளில் பிரபல பதிவர்தான். :))))//
ஹிஹி! நான் அப்ப்டித்தான் செஞ்சேன்!//
என்ன கொடுமை ஜக்கு சார் இது !!
:))
இது கூட நல்லாத்தான் இருக்கு ha ha ha ha!!!!
வாங்க குசும்பன் அண்ணாத்த.
//ஆக்காண்ணே இது ஒன்னு தான் குறைச்சல்! ஆள் இல்லாத கடையில் டீ ஆத்தும் நான் என் போட்டோவையே கலர் மாற்றி போட்டுக்கிட்டாதான் உண்டு://
ஆஹா, அவனவன் டீ இல்லாத க்ளாஸ்ல காத்த வச்சு ஆத்திகினு கீறான். ஆனானப்பட்ட நீங்களே இப்டி சொன்னா மத்தபேரு இன்னா பண்ணுவாங்க ராசா!
//ஒன்னு கூட எழுத தெரியலையே, நான் எல்லாம் அப்படி ஆகவே முடியாதா?//
தலீவா, "ஒரு விருதுக்கு இன்னொரு விருது விருது வழங்குகிறது"ன்னு கார்ட்டூன் போட்ட ஆளாச்சே, உங்களுக்கு இல்லாத விருதா?
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
//ஏன் இவ்வளவு கஷ்டமெல்லாம் ..
எடிட் யூசர் ப்ரொஃபைல் போய் டிஸ்ப்ளே நேம் முன்னாடி பிரபல பதிவர்ன்னு சேர்த்துக்கிட்டா நாமளும் முப்பது வினாடிகளில் பிரபல பதிவர்தான்.//
துபாய் ராஜா அண்ணாத்த, துபாய் போன உடனே தமிழ் பண்பாடெல்லாம் மறந்துட்டீங்களா? நாங்களே போட்டுக்க மாட்டோமாக்கும். வேற ஒரு ஆளு குடுக்குற மாரி குடுத்து நாங்க வாங்குன மாரி வாங்குவமுல்ல?
எத்தினி டாக்டர் பட்டம் வாங்கி கீறோம்? எங்கள பாத்து நாக்கு மேல பல்ல போட்டு இப்டி சொல்டீங்களே, படா ஷேமா பூட்ச்சுப்பா!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
//எத்தினி டாக்டர் பட்டம் வாங்கி கீறோம்? எங்கள பாத்து நாக்கு மேல பல்ல போட்டு இப்டி சொல்டீங்களே, படா ஷேமா பூட்ச்சுப்பா!//
;-)
எனக்கும் பிரபல பதிவர் விருது கொடுத்து கெளரவித்த ஜாம் பஜார் ஜக்குக்கு நன்றி!
படத்த நிரலியில் போட்டுவிடுகிறேன்.
:)))))
அன்புடன்,
சங்கோஜம் இல்லாத
”பிரபல பதிவர்”
அத்திவெட்டி ஜோதிபாரதி.
//எனக்கும் பிரபல பதிவர் விருது கொடுத்து கெளரவித்த ஜாம் பஜார் ஜக்குக்கு நன்றி!
படத்த நிரலியில் போட்டுவிடுகிறேன்.//
பிரபல பதிவர் ஜோதிபாரதி வாத்யார், விருது உங்க பதிவுல கன ஜோரா கீதுப்பா!
http://jothibharathi.blogspot.com/
//இன்னொரு மைல்கல்லா அல்லது ராசிக்கல்லா?//
அதெல்லாம் தெரியாது, ஆனா உங்க பதிவு இனிமே ரொம்ப கலக்கல்!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
வாங்க குடந்தை அன்புமணி வாத்யார்,
//இந்த இடுகைக்கு எனது எதிர்/ஆதரவு இடுகையை வரும் திங்கட்கிழமை எதிர்பாருங்கள்//
இத்த, இத்தத்தான் நான் சொல்றது. அது இன்னா மேட்டர்னு பின்னூட்டத்துல சொல்லக் கூடாது. தனி பதிவா போட்டு தாக்கணும் (3வது பாய்ன்ட கப்னு புடிச்சிடீங்க!!!!!).
பிரபல பதிவர் ஆவோர்த்துக்கு எல்லா தகுதியும் உங்களுக்கு வந்துருச்சி. கபால்னு விருது பட்டிய உங்க பதிவுல போட்டு உடுங்க!!!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
பிரபல பதிவர் அத்திவெட்டி ஜோதிபாரதி வாழ்க!
பிரபல பதிவர் குடந்தை அன்புமணி வாழ்க!
பிரபல பதிவர் ஜாம்பஜார் ஜக்கு வாழ்க!
பிரபல அனானி
இன்னாது?!!! பிரபல அனானியா? இவ்ளோ தூரம் ஆனதுக்கு அப்புறம் என்ன அட்ச்சு தூள் கெளப்புங்க!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
//அவனவன் டீ இல்லாத க்ளாஸ்ல காத்த வச்சு ஆத்திகினு கீறான்//
குசும்பரித்திலேயே குசும்பா. நன்று. நன்று!
இது குறும்பு கூட இல்லண்ணா ! குசும்பு ! பிரபலமாகனும்ங்கற தவிப்புக்கு காரணம் என்ன தெரியுமா ? தனிமை மரணத்து சமம். பிறந்துவிட்ட ஒவ்வொரு உயிருக்கும் மரண பயம் நிச்சயம் (அரசியல்ல ஊழல் மாதிரி). அந்த பயத்தை மறக்கத்தான் பிராபல்யத்துக்கு தவிக்கிறோம்
//இந்த இடுகைக்கு எனது எதிர்/ஆதரவு இடுகையை வரும் திங்கட்கிழமை எதிர்பாருங்கள்.//
எதிர்பார்க்கிறோம் ;-)
:-) எனக்கு கொடுங்க
எனக்கு கொடுங்க ;) இந்த புக்கை எங்க வாங்குவது
//எனக்கு கொடுங்க ;) இந்த புக்கை எங்க வாங்குவது//
பிரபல பதிவர் சுரேஷ்,
இங்க போய் வாங்கிக்கங்க!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
Post a Comment