வாத்யார், பழைய ஓலைச்சுவடி ஆனதுனால மூணே மூணு வார்த்தை காணாம பூட்ச்சு. எதுகை மோனைய வச்சு யார் மொதல்ல கரீட்டா கண்டு புடிக்கிறாங்கன்னு பாக்கலாம்.
அதிகாரம்-134
பதிவர் மாட்சி
பதிவெழுதி வாழ்வரே வாழ்வார் மற்றெல்லாம்
பின்னூட்டிப் பின்செல் பவர். (1)
பெற்றத னாலாய பயன் என் கொல் பின்னூட்டம்
நற்பதிவாய் இடார் எனின் (2)
எந் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
பின்னூட்ட மறந்தார் தமக்கு (3)
சட்டென்று பதிவெழுதி பயனுண்டோ பயனில்லை
ஹிட்கவுன்டர் ஏறா விடத்து (4)
தொட்டனைத் தூறும் மணற்கேணி பதிவர்க்கு
ஹிட் டனைத்தூறும் மகிழ்வு (5)
சக்கைப் போடு போட்டாலும் பதிவர்க்கு
மொக்கைப் பதிவே துணை (6)
ஆனான பதிவர்க்கும் பின்னூட்டம் குறைவிற்பின்
அனானி உண்டே துணை (7)
பதிவு ஹிட்கவுன்டர் பின்னூட்டம் இம்மூன்றும்
அதிகம் வேண்டார் இலர் (8)
மட்டில் வேகத்து பலப் பதிவு தாம் இடுவார்
கட்-அன்-பேஸ்ட் கைகொள் பவர் (9)
நெருநல் விடை பெறுவார் மறுநாள் மீண்டுவரும்
பெருமை உடைத்தபதி வுலகு. (10)
ஜக்குவின் பின்னூட்டம்:
1) நம்ம பாரதியாரு சொன்னாப்ல 'மொக்கையே ஆனாலும் ஆன்ற தமிழ் புலவீர்' இதுல அர்த்தம் எதுனாச்சும் கீதான்னு பாத்து சொல்லுங்க.
2) நமக்கு சின்ன வயசுலேர்ந்தே வள்ளுவரு கிட்ட ஒரு இது. அத்தொட்டு வள்ளுவராண்ட ஒரு வார்த்த: "மன்ச்சுக்க வாத்யார்!"
சரியான விடை சொன்னவர்கள் (28 July சேர்த்தது)
மூன்று வார்த்தையையும் கரீட்டா சொன்னவர்கள்:
1. நாமக்கல் சிபி (இவுருதான் ஃபர்ஸ்டு!)
2. சீனா
வாழ்த்துக்கள் வாத்யார்!!!!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
35 comments:
5. விடை தெரியவில்லை
6. மொக்கைப் பதிவே துணை விடை மொக்கை
7. அனானி உண்டே துணை. விடை அனானி
கலக்கல் குறள்கள். இதை எழுதிய வள்ளுவர் தாங்கள் தானே
//(5)
சக்கைப் போடு போட்டாலும் பதிவர்க்கு
______ப் பதிவே துணை//
"மொக்கை"
//(6)
ஆனான ப்திவர்க்கும் பின்னூட்டம் குறைவிற்பின்
______ உண்டே துணை//
"அனானி"
சரிங்களா?
4- தான் யோசிச்சிட்டு இருக்கேன். கண்டுபிடிச்சா வந்து இன்னொரு பின்னூட்டம் போடுறேன்.
அருமையா யோசிச்சிருக்கீங்க. வாழ்த்துக்கள். :)
பின்னூட்ட
மொக்கை
தெரிலபா
வள்ளுவர் பாத்தா அழுதுருவார்..
ஜக்கு அப்படியே வாஸ்தாயனர் எழுதிய புத்தகத்திலும், கொக்கோக முனிவர் எழுதிய புத்தகத்திலும் கடைசி ஒரு பத்து பக்கத்தை கானுமாம் அதையும் கண்டுபிடிச்சு எழுதினா புதுசா கல்யாணம் ஆக போறவங்களுக்கு ரொம்ப உபயோகமாக இருக்கும்!
வாங்க வந்தியத்தேவன்!
5ம் 6ம் கரீட்டா சொல்லிடீங்க. 4ல கொஞ்சம் யோசிங்க.
//கலக்கல் குறள்கள். இதை எழுதிய வள்ளுவர் தாங்கள் தானே//
ஹி..ஹி...அமாம் வாத்தியார்.
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
வாங்க ஊர்சுற்றி,
ரெண்டு கரீட்டு.
//அருமையா யோசிச்சிருக்கீங்க. வாழ்த்துக்கள்//
டாங்க்ஸ் வாத்யார்!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
வாங்க சூரியன்,
ரெண்டு க்ரீட்டு!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
//சக்கைப் போடு போட்டாலும் பதிவர்க்கு
______ப் பதிவே துணை (6)
//
சக்கைப் போடு போட்டாலும் பதிவர்க்கு
மொக்கைப் பதிவே துணை (6)
____________
கலக்கலதிகாரம்!
//2) நமக்கு சின்ன வயசுலேர்ந்தே வள்ளுவரு கிட்ட ஒரு இது. அத்தொட்டு வள்ளுவராண்ட ஒரு வார்த்த: "மன்ச்சுக்க வாத்யார்!"
இப்படிக்குஜாம்பஜார் ஜக்கு//
:))
//ஆனான ப்திவர்க்கும் பின்னூட்டம் குறைவிற்பின்
______ உண்டே துணை (7)//
அனானி உண்டே துணை!
(அதுக்குப் பேரு பின்னூட்டக் கயமைத் தனம்)
வாங்க நாமக்கல் சிபி,
ஒண்ணு கரீட்டா சொல்லிகிறீங்க!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
மறுபடியும் வாங்க நாமக்கல் சிபி,
ரெண்டாவதும் கரீட்டு !
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
தொட்டனைத் தூறும் மணற்கேணி பதிவர்க்கு
ஹிட்டனைத்தூறும் மகிழ்வு (5)
கலக்குறய்யா! ஹாட்ஸ் ஆஃப்!
குட்!
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. ஜாலியாகப் படித்தேன்.
மறுபடியும், மறுபடியும், மறுபடியும், மறுபடியும் வாங்க நாமக்கல் சிபி,
மூணாவதும் கரீட்டு!
முன்று வார்த்தையும் கரீட்டா சொல்டீங்க தலீவா!! மெய்யாலுமே சந்தோஷமா கீது!!!!!!!
மத்த பின்னூட்டமெல்லாம் கொஞ்ச நேரம் களிச்சு ரிலீஸ் செய்றேன்.
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
மறுபடியும், மறுபடியும், மறுபடியும், மறுபடியும் வாங்க நாமக்கல் சிபி,
மூணாவதும் கரீட்டு!
முன்று வார்த்தையும் கரீட்டா சொல்டீங்க தலீவா!! மெய்யாலுமே சந்தோஷமா கீது!!!!!!!
மத்த பின்னூட்டமெல்லாம் கொஞ்ச நேரம் களிச்சு ரிலீஸ் செய்றேன்.
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
suttanaithoorum, mokkai, anony..
sariya..?
முனுசாமி,
ரெண்டு சரி, ஒண்ணு தப்பு!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
//முன்று வார்த்தையும் கரீட்டா சொல்டீங்க தலீவா!! மெய்யாலுமே சந்தோஷமா கீது!!!!!!! //
எனக்கும்தான்யா ரொம்ப சந்தோஷமா கீது! ரொம்ப நாள் கழிச்சி இந்த மாதிரி குவிஸ்ல கலந்துகிட்டு எல்லாத்தையும் கரீட்டா சொல்லிட்டமேன்னு ஒரே குஷியா கீதுப்பா!
நாமக்கல் சிபி வாத்யார்,
இத்த ஒரு தபா பாருங்க:
http://jambazarjaggu.blogspot.com/2008/04/blog-post_26.html
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
//நாமக்கல் சிபி வாத்யார்,
இத்த ஒரு தபா பாருங்க:
//
பார்த்தாச்சு தலைவா! சூப்பர்!
ஆனா இன்னாத்துக்கு நைனா அத்தைப் பார்க்கச் சொன்னே?
6 : மொக்கைப் பதிவே துணை
7 : அனானி உண்டே துணை
நாமக்கல் சிபி,
//ஆனா இன்னாத்துக்கு நைனா அத்தைப் பார்க்கச் சொன்னே?//
நம்ம கறுப்பு தாடிக்காரர பாக்க சொல்ல அந்த வெள்ள தாடிகாரரு கியாபகம் வந்துட்ச்சு வாதயார்.
ரெண்டு பேருமே சூப்பர்தான்.
(ஆனங்காட்டி ரெண்டு பேர் சொல்றதையும் கேக்க மாட்டோம்!)
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
5 : ஹிட்டனைத்தூறும் மகிழ்வு
சீனா,
கரீட்டு!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
சீனா,
ரெண்டாவதும் கரீட்ட்டு!!!!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
சீனா,
மூணாவதும் கரீட்டு!!!!!
கலக்கல்!!!
(ரொம்ப சந்தோசம் வாத்யார்)
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
1) ஹிட்
2) மொக்கை
3) அனானி
நிஜமாவே இவ்வளவு யோசிக்கிற அளவுக்கு தமிழும் அறிவும் இருக்கா...நான் காமெடியானா நினைச்சா....
//நிஜமாவே இவ்வளவு யோசிக்கிற அளவுக்கு தமிழும் அறிவும் இருக்கா...நான் காமெடியானா நினைச்சா....//
இவரு ஒரு பழம் பெறும் பதிவர்னு நினைக்கிறேன் கிறுக்கன்!
//இவரு ஒரு பழம் பெறும் பதிவர்னு நினைக்கிறேன்//
அதா..ரு? (அனுபவி ராஜா நாகேஷ் ஸைடைலில படிக்கணும்!)
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
சரியான விடைகளை பதிவிலேயே சேர்த்துட்டேன் வாத்யார்.
பின்னூட்டப் புயல் நாமக்கல் சிபிக்கும், சீனாவுக்கும் ஜோரா ஒரு தபா கை தட்டிடுங்க அல்லாரும்!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
Post a Comment