அட, திருக்குறளில் ஒரு புதிர்! (Dont miss!)

வாத்யார், இந்த உலகத்துல பொறந்த... அது இன்னாது...ஆங்... தலைசிறந்த அறிவாளிகள் ரொம்ப ரொம்ப கொஞ்சம் பேர்ல நம்ம திருவள்ளுவரு ரொம்ப டாப்ல கீறாரு அப்டீங்கறதுல நானு ரொம்ப தெளிவா கீறேன்! இன்னா பண்றது? அவுரு பாட்டுக்கு கபால்னு மைலப்பூர்ல பொறந்து தமிழ்ல எளுதிட்டு பூட்டாரா அத்தொட்டு ரொம்ப பேருக்கு.... சரி இன்னாத்துக்கு வுடுங்க. அத்த பத்தி இன்னோரு நாளைக்கு வச்சுக்கலாம்.

இன்னிக்கு மேட்டருக்கு வருவோம். வள்ளுவரு ரொம்ப பெரிய மேட்டரு ஒண்ண வளக்கம் போல சும்மா பளீர்னு ரெண்டு வரீல இப்டி சொல்லிட்டாரு:

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.


இதுக்கு இன்னா அர்த்தம்னா வாத்யார், நீங்க இன்னா இன்னா மேட்டர்ல இருந்து கொஞ்சம் தள்ளி நின்னுகிறீங்களோ... அட்டாச்மென்ட வுட்டுறீங்களோ... அந்த அந்த மேட்டரால உங்களுக்கு கஷ்டம் வர்றாது! அவ்ளோதான் மேட்டரு! இன்னா? கேக்குறதுக்கு ரொம்ப ஸிம்பிளா கீதா? கொஞ்சம் சைலன்டா உக்காந்து யோசிச்சு பாருங்க இன்னான்னவோ புரியும்!

புதிர்:

இப்போ புதிர் இன்னான்னா, மத்த 1329 திருக்குறள்லயும் இல்லாத ஒரு மேட்டர் இந்த குறள்ல கீது. அது இன்னா?

க்ளூ:

வள்ளுவரு சொன்ன மேட்டருக்கும் இந்த புதிருக்கும் ரொம்ப சம்பந்தம் கீது!


அவ்ளோதான், வர்ட்டா? யோசிச்சு சொல்லுங்க.


விடை: ஒவ்வொரு மேட்டர்லயும் நம்ம போய் ஒட்றதை உட்டுடணும்னு சொல்ல வந்த வள்ளுவரு அந்த குறள் முழுசும் உதடு ரெண்டும் ஒட்டாமயே பாட்டு எளுதிகிறாரு தலீவா! இப்பொ அந்த குறளை ஒரு தபா சொல்லி பாருங்க புரியும். (ஆச்சா, இப்போ பதிவோட மொதல் வரிய மறுபடியும் ஒரு தபா படீங்க... வர்ட்டா?)

கரீட்டா சொன்னவர்கள்

மணிகண்டன் நீலன் ( இவுருதான் First!)
அருப்புக்கோட்டை பாஸ்கர்
ஜவஹர்
அனானி (1 & 2)

ஜோரா ஒரு தபா கை தட்டிடுங்க வாத்யார்!


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Only for (21+) ஸ்டெடியான பதிவர்களுக்கு மட்டும்!

வாத்யார், எப்டி கீறீங்க? ஆஃபீஸ்ல, வூட்ல அல்லாம் ஒண்ணும் டென்ஷன் இல்லியே? ஸ்டெடியாத் தானே கீறீங்க?


எதுக்கு கேக்குறேன்னா, சில பேரு எத்னாச்சும் படிச்சு ரொம்ப டென்ஷனாப் பூட்றாங்க. இப்டிதான் நம்ப அண்ணாத்த ஒரு தபா ஏதோ ஒரு பதிவ பட்ச்சுட்டு கீ-போர்டையே தூக்கிப்போட்டு ஒடச்சுட்டாரு.

சே..சே... நீங்க அப்டீல்லாம் பண்ண மாட்டீங்க! ஏன்னா, நீங்கதான் ஸ்டெடியான ஆளாச்சே. அதனாலத்தானே உள்ளாறயே வந்து கீறீங்க!

சரி, இப்போ பதிவுக்கு போவலாமா?


உங்க கண்ணையே உங்களால நம்ப முடியாது!




1) இந்த ரெண்டு வட்டத்துல எது பெருசு? சொன்னா நம்ப மாட்டீங்க, ரெண்டும் ஒரே சைஸுதான்.
(அளந்து வேணா பாத்துக்குங்க).







2) இந்த ரெண்டு ஹரிஸான்டல் கோட்ல எது நீளம்? சொன்னா நம்ப மாட்டீங்க, ரெண்டும் ஒரே சைஸுதான்.




3) இந்த ரெண்டு சதுரமும் ஒரே கலரா, வேற வேற கலரா? சொன்னா நம்பமாட்டீங்க, ரெண்டும் ஒரே கலருதான். (ஒரு கண்ணை மூடிக்குனு வேணா பாருங்க)





4) இணை கோடுகள்? சொன்னா நம்ப மாட்டீங்க, கறுப்பு கோடுகள்ரெண்டும் parallel கோடுகள். (கொஞ்சம் தூர தள்ளி நின்னு வேணா பாத்துக்குங்க).







5) நேர் கோடா? சொன்னா நம்ப மாட்டீங்க, இந்த திக்கான கறுப்பு கோடு ஒரு நேர் கோடு தான்.
(ஸ்க்ரீன்னுக்கு பக்கத்துல நின்னு வேணா பாத்துக்குங்க)





இன்னா க்ரீட்டா? எதுனாச்சும் டவுட் இருந்துச்சுன்னா பின்னூட்டத்தில கேளுங்க!


நோ...நோ....!!!! நல்லாத்தானே போய்கிட்டு இருக்கு? கீ போர்ட இன்னா பண்றீங்க? அதெல்லாம் கூடாது, ஏன்னா நீங்க தான் ஸ்டேடியான ஆளாச்சே?


வர்ட்டா வாத்யார்?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


உங்க மூக்கை அப்டியே கம்யூட்டர் ஸ்கிரீன் பக்கத்துல கொண்டாங்க (இன்னாது?)

டென்ஷன் ஆவாதீங்க வாத்யார்! ஒரு விஷயமாத்தான் சொல்றேன்! போன பதிவ படிச்சு கண்ணெல்லாம் எரியுதா? அப்டீன்னா இத்த நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கோணும்!

Stereogram, Stereogram அப்டீன்னு ஒண்ணு கீது. ஒரு படத்த ஒரு டைப்பா கண்ண வச்சுகினு பாத்தா அது 3-டியா மாறிடிச்சுன்னு வைங்க அது தான் Stereogram! இப்போ போன பதிவுல பார்த்த படத்த எடுத்துகங்க. நேரா பார்த்தா கேட்டுக்கு பின்னால ஒரே செடிகொடியா தெரியுதா?



இப்போ உங்க மூக்க அப்டியே கொணாந்து இந்த கேட்டுக்கு மத்தில வைங்க! ஹி...ஹி... மூக்கு ஸ்க்ரீன்ல இடிக்க வாணாம்... இடிக்கிற மாதிரி வைங்க. ஆச்சா? இப்போ கண்ண கொஞ்சம் கூட அசக்காம கொஞ்சம்... கொஞ்சமா... பின்னாடி நவருங்க... அல்லாம் டபுள் டபுளா தெரியற எடத்துல அப்டியே நிறுத்தி அசையாம பாருங்க. கண்ணு அசையவே கூடாது.... கொஞ்ச கொஞ்சமா 3-டில ஒரு யானை வெளில வரும். அதுக்கப்புறம் இன்னும் கொஞ்சம் பின்னால நவுந்தீங்கன்னா ரொம்ப பளிச்சுனு தெரியும்! ரெண்டு தபா ட்ரை பண்ணுங்க, அப்புறம் அஸால்டா வந்துரும்!

Stereogram

இத்தப் பத்தி இன்னும் தெரிஞ்சுக்கணுமா இங்க போங்க!

இந்த மாதிரி இன்னும் நெறைய படம் பாக்கணூமா இங்க பாருங்க!

அதெல்லாம் இருக்கட்டும் நீங்களே stereogram பண்ணனுமா (மெய்யாலுமா?!!!) அதுக்கு இங்க ட்ரை பண்ணுங்க!

இன்னா சரியா வந்துச்சா? பின்னூட்டத்துல சொல்லுங்க!


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு



இது ஒரு சோதனை பதிவு!

"யாருக்கு சோதனை?", "இன்னா சோதனை?", அப்டீன்னு அல்லாம் கேட்டு டென்ஸன் பண்ணக்கூடாது! ஆமா, சொல்ட்டேன்!!!! ஒரிஜினல் பதிவு இங்க கீது வாத்யார்:


யோசிக்காமல் பதில் சொல்ல ஒரு கேள்வி!



இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

யோசிக்காமல் பதில் சொல்ல ஒரு கேள்வி!

புதிர் இன்னாலே ரொம்ப யோசிக்க வேண்டி கீதேன்னு ரொம்ப யோசிக்கிறீங்களா? இந்த தபா யோசிக்கவே வாணம் வாத்யார். கண்ணால பாத்து அப்டியே கபால்னு பதில சொல்லிடுங்க!


கேள்வி: இந்த கேட்டுக்குப் பின்னால ஒண்ணு நின்னுகினு கீதே அது இன்னா? அது எந்த ஊர்ல இருந்து வந்து கீது?

விடை: வாத்யார், செடி கொடிக்குள்ளாற சின்னதா தேடதீங்க! இது ஒரு sterogram படம்! சரியா பாத்தீங்கன்னா பெரீ......சா யானை ஒண்ணு தெரியும்! எவ்ளோ பெரிசுன்னு கீழ பாருங்க!



இன்னும் சரியா தெரியலியா? இங்க போய் பாருங்க வெவரமா புரியும்!!!


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

சுலபமாய் 10 கேள்விகள்!

வாத்யார். இந்த தபா ரொம்ப ஈஸியான கேள்வியா கேட்டுகிறேன். டக்குன்னு பதில் சொல்லுங்க் பாக்கலாம்!


இந்த உதாரணத்த பாத்துட்டு மத்த கேள்விக்கு மட மடன்னு சொல்லுங்க:

1) வாரத்தின் 7 நாட்கள்
2) ஆங்கிலத்தின் 26 எழுத்துக்கள்


கேள்விகள்:

1) கை_____________ 5 வி__________

2) வ______________ 12 மா__________

3) வெ_____________ 4 அ___________

4) உ______________ 7 அ___________

5) இ______________ 7 ஸ்__________

6) கி______________ 11 ஆ___________

7) அ______________ 40 தி___________

8) ஆ______________ 60 நா___________

9) இ_______________ 28 மா___________

10) வ_______________ 52 வா__________


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

இதுக்கு மட்டும் பதில் சொல்டீங்க நீங்க பெரீ....ய கில்லாடிதான்!!!


நானும் எத்தினியோ கேள்வி கேட்டுகிறேன். ஆனா வாத்யார், இதுக்கு மட்டும் அஞ்சு நிமிட்ல நீங்க பதில் சொல்டீங்க நீங்க மெய்யாலுமே படா கில்லாடிதான்!


கேள்வி இன்னான்னா: கத்திவாக்கத்துக்கும் 799க்கும் இன்னா சம்மந்தம்?

அவ்ளோதான்.
யாரு மொதல்ல சொல்றாங்கன்னு பாக்கலாம்.

ஸ்டார்ட்...கேமரா...மீசிக்...

க்ளு: அத்திப்பட்டுக்கும் 799க்கும் இன்னா சம்மந்தம்?


விடை: கத்திவாக்கம், அத்திப்பட்டு, 799 இது மூணுமே எண்ணூருக்கு பக்கத்துல இருக்கு! இன்னா கரீடா?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு